top of page

சஸ்பென்ஸ் கலந்த காதல் கதையான க்ரைம் திரில்லர் "என்னை சுடும் பனி"

  • mediatalks001
  • Nov 15, 2024
  • 1 min read



எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் "எனை சுடும் பனி" என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார்.


இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை, சுந்தர்ராஜ், டிஎஸ்ஆர், தனிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


நட்ராஜ் சுந்தர்ராஜ் எல்லோரிடமும் ஜாலியாக பழகும் இளைஞன். அவருடைய லட்சியமே ஐபிஎஸ் அதிகாரியாக ஆவது. எதிர்பாராத விதமாக போலீஸ் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் அவருக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கிறார். காதலியை கரம் பிடித்தாரா. ஐபிஎஸ் அதிகாரியாக ஆனாரா. இல்லை குற்றவாளியாக சிறை பிடிக்கப்பட்டாரா. சைக்கோ, க்ரைம், திரில்லர், சஸ்பென்ஸ், காதல் என்று "என்னை சுடும் பனி" விறுவிறுப்பாக செல்கிறது.


பொள்ளாச்சி, ஆனையூர், மறையூர் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான செட் அமைத்து எடுக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவம்.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம் சேவா. ஒளிப்பதிவு வெங்கட் செய்ய, அருள் தேவ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பு சி.எம்.இளங்கோவன், சண்டை பயிற்சி டேஞ்சர் மணி, நடனம் சாண்டி, ராதிகா, கலை சோலை அன்பு, பாடல்கள் ராம் சேவா, சரவெடி சரண், வசந்த். நிர்வாக தயாரிப்பு ஜீவா, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். தயாரிப்பு ஹேமலதா சுந்தர்ராஜ்.


நவம்பர் 29'ம் தேதி "எனை சுடும் பனி" திரைக்கு வருகிறது!

Comments


©2020 by MediaTalks. 

bottom of page