top of page

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 3 hours ago
  • 2 min read

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) – டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi  Production) – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில்,இயக்குநர் விஜய் இயக்கத்தில்  ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ .


மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர் ,விஜி சந்திரசேகர்ஆகியோர் நடித்துள்ளனர் .


பள்ளி பருவ வயதிலிருந்து இசையை பயின்று வரும் நாயகி ஜியா சங்கரை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு அவரை ஒருதலையாக காதலிக்கிறார் நாயகன் மதும்கேஷ்,


இதற்கிடையில்அர்ஜுன் அசோகன் நடத்தும் இசைக்குழுவில் சேர்ந்து பாடி வரும் ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார்.


இந்நிலையில் ஜியா சங்கரின் அப்பா ஜெயபிரகாஷ் வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்.


இச் சுழலில் அர்ஜுன் அசோகன் நடத்தும் இசைக்குழுவுக்கு ஸ்காட்லாந்தில் நடக்கும் இசை போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு வருகிறது .


இதையடுத்து ஜியா சங்கர் இல்லாமல் போட்டியில் கலந்து கொள்ள அர்ஜுன் அசோகன் இசைக்குழுவுடன் ஸ்காட்லாந்தில் செல்கிறார்.

பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நாயகி ஜியா சங்கர் திருமணத்தை நிறுத்தி ஜெயபிரகாஷுக்கு தெரியாமல் ஸ்காட்லாந்திற்கு செல்கிறார். ஜியா சங்கரின் பிரச்சனையை தூரத்தில் பார்த்து ஒரு கட்டத்தில் அவருக்கு உதவி செய்யும் மதும்கேஷ் அவருக்கு தெரியாமல் ஸ்காட்லாந்திற்கு பின் தொடர்கிறார்

ஸ்காட்லாந்து செல்லும் ஜியா சங்கர் அங்கு அர்ஜுன் அசோகன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்தவுடன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள மலை உச்சில் இருந்து கீழே குதிக்கிறார்.

அதிர்ச்சியில் இதனை பார்த்த நாயகன் மதும்கேஷ் அவரை காப்பாற்றுகிறார்.


இதன் பின் ஜியா சங்கர் தூங்கி எழுந்தால் முந்தைய நாளில் நடந்த அனைத்தையும் மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறார்.


இருவரையும் காப்பாற்றும் எம் எஸ் பாஸ்கரிடம் தான் 10 வயதில் இருந்தே ஜியா சங்கரை ஒரு தலையாக காதலிப்பதாகவும் அவருக்கு தெரியாமலே மறை முகமாக உதவி வருவதாகவும் மதும்கேஷ் கூறுகிறார்.


இந்நிலையில் ஜியா சங்கரை பார்க்கும் அர்ஜுன் அசோகன் அவரை தன்னுடன் அழைத்து செல்ல முயற்சிக்கிறார்.


இறுதியில் ஜியா சங்கரை மதும்கேஷ் ஸ்காட்லாந்தில் நடைபெறும் இசை போட்டியில் பாட வைத்தாரா ? தன்னை காதலித்து ஏமாற்றிய அர்ஜுன் அசோகனிடம் ஜியா சங்கர் சென்றாரா ? அவரது பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தாரா ? இல்லையா ? என்பதுதான் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் மீதி கதை .


நாயகனாக நடித்திருக்கும் மதும்கேஷ் அறிமுக நாயகன் போல இயல்பான நடிப்பில் அனைத்து உணர்வுகளுடன் மனதில் காதலை வைத்து கொண்டு காதலிக்காக மலை உச்சியில் இருந்து குதிப்பது, தன் காதலை சொல்ல முடியாமல் தவிப்பது என ஏக்கத்துடன் உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார்


நாயகியாக நடித்திருக்கும் அழகான ஜியா சங்கர் கதைக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் ரசிகர்களின் மனதை கவர்கிறார் .


ஜியா சங்கரின் காதலராக வரும் அர்ஜுன் அசோகன் அறிமுக படத்திலேயே சிறப்பான நடிப்பில் காதல், காமெடி , நடனம் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.


மருத்துவராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்க முடிகிறது. அப்பாவாக நடித்திருக்கும் ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர், என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பார் ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக உளள்து.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.


அழகான ஒரு முக்கோண காதல் கதையுடன் காமெடி கலந்து ரசிக்க வைக்கும் திரைக்கதை அமைப்பில் எதிர்பாராத திருப்பங்களுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விஜய்


மொத்தத்தில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – புதிய வடிவில் ஒரு காதல் கதை


ரேட்டிங் - 3 .5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page