‘போலீஸ் ஃபேமிலி’ - விமர்சனம்
- mediatalks001
- 2 hours ago
- 1 min read

ஆன் தி டேபிள் புரொடக்ஷன்ஸ் சார்பில் மலைசாமி ஏ.எம்.ராஜா தயாரிப்பில் பாலு எம் இயக்கத்தில் 'போலீஸ் ஃபேமிலி'
சரவணன், காதல் சுகுமார், சுரேகா, நிஷா துபே, மலைசாமி ஏ.எம்.ராஜா, ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர்
சந்தேகத்தின் பேரில் கஞ்சா கடத்தியதாக காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மலைச்சாமி , கான்ஸ்டபிள் காதல் சுகுமார் உட்பட நான்கு பேரின் கடுமையாக தாக்குதலால் அந்த இளைஞர் மயக்கமடைகிறார் .
இந்நிலையில் அந்த இளைஞர் அரசியல் செல்வாக்கு உள்ள மிக பெரிய தாதாவான சரவணனின் மகன் என தெரிந்ததும், பயத்தில் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மலைசாமி தலைமையிலான காவலர்கள் குழு, மயக்க நிலையில் இருக்கும் இளைஞரை இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசி விடுகின்றனர் .
மறுநாள் சரவணனுக்கு தன் மகன் கொலையான தகவலும் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் நான்கு காவலர்கள் தாக்கியதும் தெரிந்து விடுகிறது.
ஆளுங்கட்சி எம் எல் ஏ தாஸ் சாந்தகுமார் ஆதரவில் தன் மகனை கொலை செய்த நான்கு காவலர்களை பழிவாங்க அவர்களது குடும்பத்தினரை கொலை செய்ய முடிவு செய்கிறார் சரவணன் .
இறுதியில் சரவணன் திட்டமிட்டபடி நான்கு காவலர்களின் குடும்பத்தினரை பழி வாங்கினாரா ? உண்மையில் சரவணனின் மகனை கொலை செய்த மர்ம நபர் யார் ? என்பதுதான் ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜா மலைசாமி கதாபாத்திரத்தை உணர்ந்து பாசமுள்ள தந்தையாகவும் , தன் மகள்களின் நிலையை கண்டு உருகும் காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .
வில்லனாக நடித்திருக்கும் சரவணன் அனுபவ நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .
கதையின் முக்கிய திருப்பு முனையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் சுகுமார். கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷா தூபே ,சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் ஜெயா கே.தாஸின் இசையும் , ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
லாக் அப் மரணத்தை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் யூகிக்க முடியாத எதிர்பார்க்காத திருப்பங்களுடன் கிரைம் கலந்த பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாலு.எம்
ரேட்டிங்- 3 / 5





Comments