MediaTalks Logo
Header Advertisement
reviews
21 March 2026 at 15:38•1 Views

‘யூத்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘யூத்’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

பத்தாம் வகுப்பில் சரியாக படிக்காமல் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் சூரஜ் வெஞ்சரமோடு- தேவதர்ஷினி மகனான நாயகன் கென் கருணாஸ், 11ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் மீது கவனம் செலுத்துகிறார்.

படிப்பை பற்றி கவலைபடாமல் பக்கத்து வகுப்பில் படிக்கும் மீனாட்சி தினேஷை கென் கருணாஸ் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். சில நாட்கள் கடந்த நிலையில் மீனாட்சி தினேஷின் பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லை என ஊருக்கு செல்கிறார்.

இந்நேரத்தில் முகநூல்பக்கத்தின் மூலம் அறிமுகமாகும் பிரியான்ஷி யாதவ் கென் கருணாஸூடன் நெருங்கி பழக இதை நேரில் பார்க்கும் மீனாட்சி தினேஷ் கென் கருணாஸை கன்னத்தில் அறைவதால் இருவரது காதல் முறிந்து போகிறது.

இந்நிலையில் பிரியான்ஷி யாதவின் காதலும் பொய் என கென் கருணாஸூக்கு தெரிய வருகிறது

இதன் பின் கென் கருணாஸ் தன்னுடன் படிக்கும் சக மாணவியான அனிஷ்மா அனில்குமாரை காதலிக்க ஆரம்பிக்கிறார் .

இச் சுழலில் ஆண்டு விழாவில் ஒரு மாணவனால் ஏற்படும் பிரச்சனையில் கென் கருணாஸ் அடிதடியில் இறங்க பள்ளியின் முதல்வரான நளினியை தேவதர்ஷினி சந்திக்கும் நிலையில் நளினியின் கண்டிப்பான பேச்சினால் தேவதர்ஷினி மயக்கமடைய உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் .

இறுதியில் கென் கருணாஸின் காதலை அனிஷ்மா அனில்குமார் ஏற்று கொண்டாரா ? பிரச்சனையில் சிக்கி கொண்ட கென் கருணாஸ் பள்ளிப்படிப்பை தொடர்ந்தாரா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவதர்ஷினி உடல் நலத்துடன் வீடு திரும்பினாரா ? என்பதுதான் ‘யூத்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் கென் கருணாஸ் பள்ளி மாணவனாக துள்ளலான நடிப்பால் காதல், காமெடி , ஆட்டம், பாட்டம், சண்டை என அனைத்திலும் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சிகள் அனைத்தும் படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது .

நாயகிகளாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மூன்று நாயகிகள் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சரமோடு ,நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி இருவருமே இயல்பான நடிப்பால் கதாபாத்திரங்களாக கென் கருணாஸின் பெற்றோர்களாக வாழ்கின்றனர்.

பள்ளி முதல்வராக நடித்திருக்கும் நளினி , நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் விக்கி ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது.

இயல்பான பள்ளி மாணவனின் கதையாக காதல் , கல்வி, குடும்பம் ஆகியவற்றை மைய கருவாக வைத்து காதலை விட கல்வியும், குடும்பமும் முக்கியம் என்பதை அழுத்தமாக சொல்வதுடன் இளமை துள்ளலான திரைக்கதை அமைப்பில் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு குடும்ப படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கென் கருணாஸ்

ரேட்டிங் : 4 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: