MediaTalks Logo
Header Advertisement
reviews
29 March 2026 at 00:09•1 Views

’ஹேப்பி ராஜ்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
’ஹேப்பி ராஜ்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

பியான்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர்   மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில்  ’ஹேப்பி ராஜ்’

ஜீ வி பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா,  ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், அப்பாஸ், பிரார்த்தனா நாதன், அதிர்ச்சி அருண், மதுரை முத்து  ஆகியோர் நடித்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ்குமாரின் தந்தை ஜார்ஜ் மரியன் மற்றவர்கள் கிண்டல் கேலி செய்யும் விதமாக தனது உருவம் அமைந்து இருப்பதால் தன்னைவிட தன் மகன் ஜி.வி.பிரகாஷ் அழகாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்து அவரை பாதுகாப்பாக வளர்க்கிறார் .

கல்லூரியில் தன்னுடன் படிக்கும் பிரார்த்தனா நாதனிடம் ஜி.வி.பிரகாஷ்குமார் காதலை சொல்ல ஜார்ஜ் மரியனால் அவரது காதல் நிலைக்காமல் போகிறது.

ஆனால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகும் தன் தந்தையால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக கருதும், ஜி.வி.பிரகாஷ்குமார் , அவரை விட்டு விலகி, வாழ விரும்புகிறார்.

இந்நிலையில் பெங்களூரில் அவருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு நாயகி ஸ்ரீ கெளரி பிரியாவை பார்க்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

பணக்காரரான ஸ்ரீ கெளரி பிரியாவின் அப்பா அப்பாஸ், மகள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

இரு வீட்டாரும் ஒன்றாக இணைந்து திருமண ஏற்பாடுகள் நடக்க இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் தந்தை ஜார்ஜ் மரியனை பார்த்து அப்பாஸ் அவமானப்படுத்தும் வகையில் பேசி விடுகிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு திருமணம் நின்று விடுகிறது.

தனது திருமணம் நின்று போனதற்கு தந்தை ஜார்ஜ் மரியன்தான் காரணம் என நினைக்கும்  ஜி.வி.பிரகாஷ்குமார் நின்ற திருமணத்தை மீண்டும் நடைபெறுவதற்கான முயற்சியை மேற்கொள்கிறார் .

இறுதியில் ஸ்ரீ கெளரி பிரியாவுடன் ஜி.வி.பிரகாஷ்குமார் திருமணம் சிறப்பாக நடைபெற்றதா ? எளிய குணம் கொண்ட தனது தந்தையின் அன்பை ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிந்து கொண்டாரா? என்பதை சொல்லும் படம்தான் ’ஹேப்பி ராஜ்’

ஹேப்பி ராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் இயல்பான நடிப்பில் காதல்,, நடனம் ,செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் குறிப்பாக இறுதி காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பில் பார்வையாளர்கள் கண் கலங்கும்படி அசத்தியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ கெளரி பிரியா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் அப்பாஸ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார் .

ஜி.வி.பிரகாஷ்குமாரின் தந்தையாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் குண சித்திர கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், மதுரை முத்து மற்றும் அதிர்ச்சி மதன் , பிரார்த்தனா நாதன் என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

மதன் கிரிஸ்டோபரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

தந்தை – மகன் இடையிலான உணர்வுபூர்வமான உறவை கதையாக கொண்டு காதல், பாசம், உருவ கேலி , ஏற்றத்தாழ்வு என அழுத்தமான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலப்புடன் அனைவரும் ரசிக்கும் விதத்தில் உணர்வுப்பூர்வமான திரைபடத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன்

மொத்தத்தில் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ’ஹேப்பி ராஜ்’ –

ரேட்டிங் : 3.2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: