MediaTalks Logo
Header Advertisement
reviews
29 March 2026 at 14:03•1 Views

‘சாத்தான் – தி டார்க்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘சாத்தான் – தி டார்க்’  -  விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

பி எப் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் தயாரிப்பில் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில், எஃப் ஜே, ஐரா,மோன பத்ரே, எட்வர்ட்,சாந்தினி தமிழரசன்,ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாத்தான் தீ டார்க்.

மலை கிராமமான அஸ்தினாபுரத்தில் வாழ்ந்து வரும் மோன பத்ரேவிற்கு இரண்டு மகள்கள் ஒருவர் பள்ளியில் படிக்கும் நாயகி ஐரா மற்றும் வாய் பேச முடியாத இரண்டாவது மகளும் இருக்கின்றனர்

இந்நிலையில் மோன பத்ரேவின் அம்மா பேய் பிடித்தவர் போல் இருப்பதால் அவரை வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கும் நிலையில் அம்மா மோன பத்ரேவின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டு தன் உடலை தானே காயப்படுத்திக் கொண்டு சில நேரங்களில் கொடுரமாக நடந்துக் கொள்கிறார்.

மோன பத்ரேவின் அனுமாஷ்ய நடவடிக்கைகளால் பயந்து பள்ளிக்கு செல்லும் அவருடைய மகள் ஐரா வீட்டுக்குள்ளேயே அம்மாவை பூட்டி வைத்துவிட்டு சென்று விடுகிறார். இதே சமயம் ஊரில் பலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். ஊர் மக்கள் அனைவரும் இது அனைத்திற்கும் மோன பத்ரேதான் காரணம் என்று முடிவு எடுக்கின்றனர். இதனையடுத்து இந்த வழக்கை போலீஸ் தீவிரமாக விசாரிக்கிறது.

இதே வேளையில் ஐரா கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கபடுகிறார் .

இச் சுழலில் உண்மையை தெரிந்துக் கொள்ள ஐராவுடன் படிக்கும் நாயகன் எஃப்.ஜெ ஐரா வீட்டிற்கு நண்பனுடன் செல்கிறார். அங்கு சென்றதுடன் இருவரும் வீட்டிற்குள் இருக்கும் மர்மமான அனுமாஷ்ய சக்தியிடம் சிக்கி கொள்கிறார்கள் .

இறுதியில் ஊர் மக்களால் நாயகி ஐராவின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதா ? நாயகி ஐராவின் அம்மாவான மோன பத்ரே யார் ? அவரது மர்ம பின்னணி என்ன ? இந்த தொடர் கொலைகளுக்கு காரணம் என்ன? கொலை குற்றவாளி யார் என்பதை போலீஸ் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘சாத்தான் – தி டார்க்’ படத்தின் மீதிக்கதை.

பள்ளி மாணவராக நடித்திருக்கும் எஃப்.ஜெ சவாலான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

பள்ளி மாணவியாக நடித்திருக்கும் ஐரா துணிச்சலான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பில் அனைத்து காட்சிகளிலும் குறிப்பாக பயத்துடன் அம்மாவிடம் மாட்டிக்கொண்டு மிரட்சியுடன் தவிக்கும் காட்சிகள் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறார் .

ஐராவின் அம்மாவாக நடித்திருக்கும் மோன பத்ரே, அமைதியான நடிப்பில் கண்களால் மிரட்டுகிறார்.

சாந்தினி தமிழரசன் படத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் நடிப்பில் தன் பங்கை பூர்த்தி செய்கிறார் .

கவனிக்கும்படியான நடிப்பில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் எட்வர்ட்உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்றபடி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அஷ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

பாலா ஜி.ராமசாமி, ஒளிப்பதிவு கதையின் வேகத்திற்கு துணை நிற்கிறது.

கடவுள் நம்பிக்கை இல்லாத சாத்தான் வழிபாட்டின் மீது நம்பிக்கை வைத்து மனித நரபலி கொடுப்பவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இடையே நடக்கும் திகிலான அமானுஷ்ய மோதலை கதையாக வைத்து தொடர்கொலை, மர்மங்கள் , போலீஸ் விசாரணை என விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் ரசிகர்கள் அனைவரும் பயப்படும் வகையில் சஸ்பென்ஸ் நிறைந்த மர்ம க்ரைம் திரில்லராக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம்

மொத்தத்தில் ‘சாத்தான் – தி டார்க்’ – திகிலான பதற்றம்

ரேட்டிங் - 3 .3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: