’காளிதாஸ் 2’ - விமர்சனம்
- mediatalks001
- 2 days ago
- 2 min read

ஸ்கை பிக்சர்ஸ் “ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் ’காளிதாஸ் 2’
பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ, அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்
சென்னையில் திறமையான காவல் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார் பரத் . இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள புறநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர் . இந்த குடியிருப்பின் செயலாளராக சங்கீதா இருக்கிறார்.
இதே அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு வயது பெண் குழந்தையுடன் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதிகள் வாழ்ந்து வருகிறார்கள்.
இச் சுழலில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவரும் சங்கீதாவின் தலைமையில் புத்தாண்டு நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர் .
இச் சமயத்தில் அபர்ணதியின் குழந்தை காணாமல் போகிறது. இதன் பின் குழந்தையை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ அடுக்குமாடி குடியிருப்புக்கு வருகிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பேச்சுலர்களை பற்றி பரத்தும் மற்றும் பவானி ஸ்ரீயும் விசாரிக்கையில் அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி ஏற்கனவே சிறுமி கற்பழிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்பதால் சந்தேகத்தின் பேரில் அவரை விசாரிக்கும்போது காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கிறது.
இந்நிலையில் அஜய் கார்த்தி கைது செய்யப்படும் நிலையில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் மூத்த வழக்கறிஞராக இருக்கும் பிரகாஷ்ராஜ் அவரை விடுவித்து அழைத்துச் செல்கிறார்.
பரத் குழந்தையை கொன்ற குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கும் நேரத்தில் அஜய் கார்த்தி தான் கொலையாளி என்று நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் பவானி ஸ்ரீ.
இந்த நேரத்தில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் தொடர் கொலையாக மற்றொரு சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடக்க பரத் மற்றும் பவானி ஸ்ரீ யுடன் குடியிருப்புவாசிகள் அனைவரும் பதற்றத்துடன் அதிர்ச்சி அடைகின்றனர் .
இறுதியில் குழந்தையையும் , அந்த சிறுமியையும் கொன்ற கொலையாளி யார் ? உண்மையில் அஜய் கார்த்திதான் இந்த இருவரையும் கொன்றாரா? கொலையாளி யார் என்பதை பரத்தும் பவானி ஸ்ரீயும் கண்டுபிடித்தார்களா ? இல்லையா ? என்பதுதான் ’காளிதாஸ் 2’ படத்தின் மீதிக் கதை
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் கச்சிதமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பில் காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க விசாரணையை மேற்கொள்ளும்போது உடல் மொழியில், நடை, பேச்சு , ஆக்ஷன் என அனைத்திலும் சிறப்பாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி அறிமுக நாயகன் போல இல்லாமல் தேர்ந்த நடிகராக கதையுடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார்
நீண்டவருடங்களுக்கு ப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் பூவே உனக்காக ’ சங்கீதா, கதையின் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.
அபர்ணதி, அனந்த் நாக், பிரகாஷ் ராஜ், கிஷோர் ,என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது., பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு கதையின் வேகத்திற்கு இணையாக உள்ளது .
அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமாக நடக்கும் கொலை சம்பவத்தை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத திருப்பங்கள் அமைந்த விறு விறுப்பான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில்
மொத்தத்தில் ’காளிதாஸ் 2’ – பதற்றமான க்ரைம் திரில்லர்
ரேட்டிங் : 4 / 5





Comments