’லீடர்’ - விமர்சனம்
- mediatalks001
- 2 days ago
- 2 min read

தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக இருக்கும் நாயகன் லெஜெண்ட் சரவணன் அம்மா இல்லாத தன் மகள் மீது அளவு கடந்த பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்
ஹாங்காங்கில் இருக்கும் வில்லன் சந்தோஷ் பிரதாப் எளிதில் வெடிக்கக்கூடிய ரசாயன பொருள் அடங்கிய கண்டெய்னரை தூத்துக்குடி துறைமுகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லன் பாகுபலி பிரபாகரனிடம் ஒப்படைக்கிறார் .
தூத்துக்குடி துறைமுகம் கண்டெய்னரில் இருக்கும் மர்ம பொருள் என்ன? என்று அறிந்து கொள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா ஜெர்மையா முயற்சிக்கிறார்.
மற்றொரு பக்கம் கார் மெக்கானிக்காக துறைமுகத்திற்குள் அடிக்கடி சென்று வரும் லெஜண்ட் சரவணனை வைத்து அந்த கண்டெய்னரை பிடிக்க ஆண்ட்ரியா ஜெர்மையா நினைக்கிறார்.
அதற்காக ஆண்ட்ரியா ஜெர்மையா லெஜெண்ட் சரவணனின் மகளை வைத்து ஒரு திட்டம் போடுகிறார் அந்த திட்டத்தில் லெஜெண்ட் சரவணன் பிரபாகரனின் கடத்தல் பொருளை போலீசில் சிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் அவரது சாம்ராஜ்யத்தையே அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இந்த முயற்சியில் காவல்துறை உயர் அதிகாரியான ஷாம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனால் கோபமடையும் ஷாம், ஒரு கார் மெக்கானிக்கான லெஜெண்ட் சரவணன் எப்படி இப்படி ஒரு வேலையை செய்ய முடியும் என்று சந்தேகம் அடைய லெஜெண்ட் சரவணன் பற்றி ரகசியமாக விசாரிக்கையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கிறது. மேலும் காவல்துறையை பயன்படுத்தி திட்டமிட்டு பாகுபலி பிரபாகரனை லெஜன்ட் சரவணன் அழித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்கிறார்
இச் சுழலில் சந்தோஷ் பிரதாப் லெஜண்ட் சரவணனை பழிவாங்க தூத்துக்குடி வருகிறார்.
இறுதியில் காவல் துறை அதிகாரி ஷாம் லெஜண்ட் சரவணனை கைது செய்தாரா? சந்தோஷ் பிரதாப் லெஜண்ட் சரவணனை பழி வாங்கினாரா? இல்லையா? . லெஜெண்ட் சரவணன் யார்? எதற்காக காவல்துறையை பயன்படுத்தி பாகுபலி பிரபாகரனை அழித்தார்? என்பதே ’லீடர்’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் லெஜண்ட் சரவணன் அதிரடி நாயகனாக மிரட்டலான நடிப்பிலும் . காதல், பாசம், செண்டிமெண்ட் , என அனைத்திலும் குறிப்பாக மகளிடம் தான்தான் அப்பா என்று சொல்ல முடியாமல் தவிக்கும் இடம் பாராட்டுக்குரியது,
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத் பார்க்க அழகாவும் அளவான நடிப்பால் கவர்கிறார்.
வில்லனாக மூன்று வேடங்களில் நடித்து மிரட்டியிருக்கிறார் சந்தோஷ் பிரதாப்
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஜெர்மையா, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஷாம், பாகுபலி பிரபாகரன், லால், விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை அதிரடியாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.எஸ், ஒளிப்பதிவு அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
தந்தை – மகள் பாசத்தை மையமாக கொண்ட கதையுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் அதிரடி ஆக்ஷனுடன் முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
மொத்தத்தில் ’லீடர்’ – நினைத்ததை முடிப்பவன்
மதிப்பீடு : 3 / 5





Comments