’பைக்கர்’ - விமர்சனம்
- mediatalks001
- 2 days ago
- 2 min read

யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிருஷ்ணா ரெட்டி- பிரமோத் உப்பலபா ட்டி தயாரிப்பில் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் ’பைக்கர்’
ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர் ,மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி, துளசி மற்றும் பலர் நடித்துள்ளனர்
முன்னாள் மோட்டார் பைக் பந்தய வீரராக இருக்கும் டாக்டர் ராஜசேகர் தன்னுடைய மகனாகிய ஷர்வானந்த்தையும் தன்னைப் போலவே சிறந்த மோட்டார் பைக் பந்தய வீரராக உருவாக்க நினைக்கிறார். அதற்காக கடுமையான பயிற்சிஅவருக்கு கொடுக்கிறார் .
ஷர்வானந்த்தும் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் ராஜசேகரும் அவருக்கு குருவாக இருந்து இந்த துறையில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறார்.
இந்நிலையில் ஷர்வானந்த் பல போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறுகிறார். அந்த சமயத்தில் ராஜசேகர் எதிர்பார்த்தது போல இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டை தன்னுடைய மகன் மூலம் உலகிற்கு நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
இதே சமயம் நாயகி மாளவிகா நாயருடன் ஷர்வானந்துக்கு காதல் ஏற்படுகிறது. திடீர் என மாளவிகா நாயரை திருமணம் செய்து கொண்டு அப்பா ராஜசேகரை விட்டு பிரிந்து செல்கிறார்.
இச் சுழலில் ஷர்வானந்த்தை ஒப்பந்தம் செய்த நிறுவனம் ராஜசேகரிடம் பணத்தை திருப்பி கேட்கிறது.
ஷர்வானந்த் செய்த தவறால் ராஜசேகர் தண்டிக்கப்படுவதோடு, அவருக்கு மோசடி நபர் மற்றும் துரோகி என்கிற பட்டம் அவருக்கு ஏற்படுகிறது.
இதனால் ராஜசேகருக்கு மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சியாளர் பணியை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
ராஜசேகரிடம் இருந்து விலகி வாழ்ந்து வரும் ஷர்வானந்த் அவரது கௌரவத்தை காப்பாற்ற சர்வதேச அளவில் நடக்கும் பைக் பந்தய போட்டியில் கலந்து கொள்ள நினைக்கிறார்.
இறுதியில் சர்வ தேச போட்டியில் ஷர்வானந்த் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா ? மோசடி நபர் மற்றும் துரோகி என்கிற குற்றச்சாட்டிலிருந்து ராஜசேகர் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா? என்பதே ’பைக்கர்’ படத்தின் மீதிக்கதை.
மோட்டார் பைக் பந்தய வீரராக நடித்திருக்கும் ஷர்வானந்த் அந்த கதாபாத்திரமாகவே உருமாறி பந்தய வீரராக வாழ்ந்திருக்கிறார் காதல், அப்பா பாசம்,ஆக்ஷன் , செண்டிமெண்ட் , எமோஷனல் என அனைத்திலும் அசத்தலான நடிப்புடன் அவரது கடின உழைப்பு பைக் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக எடுக்கும் பயிற்சியில் தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா நாயர், காதலியாக இருக்கும் போது சாகசம் செய்யும் காதலனை ஊக்கப்படுத்தும்போதும் ,மனைவியான பின் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து கணவனை பார்த்து பதறும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜசேகர் சிறந்த பயிற்சியாளரை போல கண்டிப்பு மிக்க பயிற்சியாளராகவும் , பாசத்தை வெளிகாட்டிக் கொள்ளாத அப்பவாகவும் , மாணவனை வெற்றி பெற வைக்க நினைக்கும் குருவாகவும் அனுபவ நடிப்பால் தன் திறமையை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.
நிரூப் ,மாஸ்டர் சௌர்யா , தொழிலதிபராக நடித்திருக்கும் அதுல் குல்கர்னி. நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் துளசி என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ், ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தை மையமாக கொண்ட கதையுடன் குடும்ப பின்னணியுடன் அப்பா – மகன் பாசம், காதல். லட்சியம் என அனைத்தையும் கலந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் கிளைமாக்ஸ் பந்தய காட்சியும், ஆபத்து நிறைந்த பந்தய வீரர்களின் பயணமும் பார்வையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆக்ஷனுடன் அனைவரும் ரசிக்கும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி,
மொத்தத்தில் ’பைக்கர்’ – வெற்றி வீரன்
ரேட்டிங் : 3.5 / 5





Comments