MediaTalks Logo
Header Advertisement
reviews
11 April 2026 at 23:27•1 Views

‘ TN 2026 ’ தங்க நட்சத்திரம் - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘ TN 2026 ’ தங்க நட்சத்திரம் - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

கண்ணன் ரவி குழுமத்தின் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில் இயக்குநர் உமாபதி எஸ்.ராமையா இயக்கத்தில்  ‘TN 2026’ தங்க நட்சத்திரம்

நட்டி நட்ராஜ், ஷிரித்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ,எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர் .

சென்னையில் பிழைப்புக்காக வரும் வட மாநிலத்தை சேர்ந்த நட்டி நடராஜை தமிழ் திரையுலகில் குல்கந்த் குமார் என்ற பெயரில் ஒரு இயக்குனர் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார் .

அவருடைய முதல் படம் ரசிகர்களிடையே பெரும் அளவில் வெற்றி பெறுவதுடன் ரசிகர்கள் மனதில் அடுத்த எம் ஜி ஆர் என்ற இடத்தையும் பிடித்து விடுகிறார்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பொள்ளாச்சியில் ஜமீன்தாராக இருக்கும் தம்பி ராமையா வளர்ந்து வரும் நட்டி நடராஜை அடுத்த எம் ஜி ஆர் ஆக நினைத்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரை சினிமாவில் உச்ச நடிகராக கொண்டு வருகிறார்

2026 ஆம் ஆண்டு நட்டி நட்ராஜ்தான் தமிழக முதல்வர் என்கிற நம்பிக்கையுடன் அரசியலுக்கு வரவழைத்து அவரது தலைமையில் தமிழக அரசியலில் புதிய கட்சி ஒன்றை தம்பி ராமையா தொடங்குகிறார்.

நட்டி நடராஜும் கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்

இதனையடுத்து ஆளும் கட்சியினரால் நட்டி நடராஜுக்கு பல பிரச்சனைகள் வருகிறது.

இச் சுழலில் நட்டி நடராஜிக்கு திடீர் என உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இறுதியில் தம்பி ராமையா திட்டப்படி நாயகன் நட்டி நட்ராஜ் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனாரா? இல்லையா? என்பதுதான் ‘‘TN 2026’ தங்க நட்சத்திரம் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் குல்கந்த் குமார் என்ற தங்க நட்சத்திரமாக இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .

ஜமீன்தாராக நட்டி நட்ராஜின் அரசியல் குருவாக நடித்திருக்கும் தம்பி ராமையா அனுபவ நடிப்பில் அசத்தலாக நடித்துள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு. நட்டி நட்ராஜின் மனைவியாக பரதநாட்டிய கலைஞராக நடித்திருக்கும்  ஷிரித்தா ராவ், நடிகையாக வரும் சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு காட்சிகள் கதைகேற்றபடி பிரம்மாண்டமாக இருக்கிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரானால் அடுத்து அந்த நடிகர் காலடி எடுத்து வைக்கும் அரசியல் களமான கதையை மையமாக வைத்து ரசிக்கவும் சிந்திக்கவும் தகுந்த அரசியல் நையாண்டியுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் நகைக்சுவை கலந்த வசனங்களுடன் பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்கும்படி கல கலப்பான அரசியல் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் உமாபதி ராமையா

மொத்தத்தில் ‘TN 2026’ தங்க நட்சத்திரம் – ரசிக்க வைக்கும் நையாண்டி அரசியல்

ரேட்டிங் - 4 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: