top of page

‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) - விமர்சனம்

  • mediatalks001
  • Apr 12
  • 2 min read

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா, எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்   ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK).


பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, சீமான், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி கிஷன், ஷாரா , ஆனந்தராஜ், மாளவிகா ஆகியோர்நடித்துள்ளனர் .


காதல் திருமணம் செய்து கொண்ட எஸ் ஜே சூர்யா தன் திருமண வாழ்க்கை தோல்வியடைந்ததால் 2040 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இனி எந்த காதலர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற செயலியை உருவாக்குகிறார்


இந்த செயலின் மூலம் பொருத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்யலாம். அவர் எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம். அடுத்த கட்டமாக இந்த செயலி மூலம் காதலிப்பவர்கள் நண்பர்களாக இருக்கிறார்களா? இல்லை காதலர்களாக இருக்கிறார்களா அதற்கு எவ்வளவு பர்சன்டேஜ் என்று அந்த செயலி கணித்து கூறுகிறது.


இந்த செயலி காதலர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


மறுபக்கம் மொபைல் போனால் தனது மகளை இழக்கும் சீமான் பசுமை உலகம் என்ற ஒரு இடத்தை உருவாக்குகிறார். இதனால் இவரது மகன் பிரதீப் ரங்கநாதன் அப்பாவின் சொல்படி கேட்டு மொபைல் போனை பயன்படுத்தாமல் இருக்கிறார். இங்கு மொபைல் போனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மொபைலுக்கு அடிமையான குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வகுப்புகளை நடத்துகிறார்கள்.


இந்நிலையில் நாயகி கீர்த்தி ஷெட்டி சிறு வயது முதலே மொபைல் போன் வழிகாட்டுதலில் வளர்வதுடன் சமூக ஊடகத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.


மொபைல் போன் இல்லாமல் வாழ்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன்ஒரு நாள் கீர்த்தி ஷெட்டியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.


கீர்த்தி ஷெட்டிக்காக தன் அப்பாவிற்கு தெரியாமல் ஒரு மொபைல் போன் வாங்குவதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் ஒரு LIK செயலியை இணைத்து கீர்த்தி ஷெட்டியுடன் நட்பை ஏற்படுத்தி பழக ஆரம்பித்தவுடன் நாளடைவில் இருவரும் காதலிக்கின்றனர்


அவர்களின் காதல் எந்த அளவிற்கு உண்மை என்பதை அந்த செயலியின் மூலம் தெரிந்து கொள்ள நினைக்கும் பொழுது அது அவர்களுக்குள் இருப்பதே வெறும் மூன்று சதவீத காதல் என்றே காட்டுகிறது. இதனால் கீர்த்தி ஷெட்டி பிரதீப் ரங்கநாதனை விட்டு பிரிகிறார்.


இந்த செயலி தவறானது இது காதலை சரியாக காட்டவில்லை என்று எஸ் ஜே சூர்யாவிடம் சொல்லி அதனை போலி என்கிறார்பிரதீப் ரங்கநாதன் .

ஆனால் சூர்யாவோ இல்லை தன்னுடைய கண்டுபிடிப்பான LIK செயலி தவறானது இல்லை என்று வாதாடுகிறார்.


பிரதீப் ரங்கநாதன் எஸ் ஜே சூர்யாவிடம் இந்த LIK செயலி தவறு என்னுடைய காதல்தான் உண்மை என்றும் தான் 30 நாட்களுக்குள் கீர்த்தி ஷெட்டியை காதலிக்க வைத்து விட்டால் உங்களுடைய LIK செயலி தவறு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சவால் விடுகிறார் .


இறுதியில் எஸ் ஜே சூர்யா உருவாக்கிய LIK செயலி தவறானது என்பதை காதலர்களிடம் பிரதீப் ரங்கநாதன் நிரூபித்தாரா ? பிரதீப் ரங்கநாதனும் – கீர்த்திஷெட்டியும் காதலர்களாக மீண்டும் இணைந்தார்களா ? இல்லையா? என்பதுதான் ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் மீதிக்கதை.



நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் துறுதுறுஇளைஞர் கதாபாத்திரத்தில் . காதல், பாசம், நட்பு, சண்டை , நடனம் , எமோஷனல் என அனைத்திலும் குறிப்பாக 30 நாட்களுக்குள் கிர்த்தி ஷெட்டிக்கு எஸ் ஜே சூர்யா உருவாக்கிய LIK செயலி தவறானது என்பதை புரிய வைக்க அவரது ஒவ்வொரு முயற்சிகளும் சிறப்பான நடிப்பில் சிரிக்கவும் ரசிக்கவும் முடிகிறது.


நாயகியாக நடித்திருக்கும் கிர்த்தி ஷெட்டி கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


LIK செயலியின் நிறுவனராக நடித்திருக்கும் எஸ்.ஜெ.சூர்யா வழக்கமான பாணியில் ரசிக்கும்படியான நடிப்பில் கொடூர குணம் கொண்ட கதாபாத்திரத்தில் அசத்துகிறார் .


பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்திருக்கும் சீமான் இயல்பான நடிப்பால் தமிழர் என்ற உணர்வோடு அவர் சொல்லும் அறிவுரைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அமைந்துள்ளது


பிரதீப் ரங்கநாதன் தோழியாக வரும் கெளரி கிஷன், யோகி பாபு, பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்திருக்கும் ஷாரா நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள்.


இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம், பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.


ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.


காதலிக்கும் காதலர்கள் உண்மையான காதலை தெரிந்து கொள்ள LIK என்ற செயலி பயன்படுத்துவதை மையமாக கொண்ட கதையுடன் குடும்பத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனால் பாதிக்கப்படுதை அழுத்தமாக பதிவு செய்வதுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இயல்பான காதல் திரைப்படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்


மொத்தத்தில் ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) கணினிமயமான காதலின் வளர்ச்சி


ரேட்டிங் : 3 . 5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page