MediaTalks Logo
Header Advertisement
reviews
18 April 2026 at 17:01•1 Views

‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

பிரிண்ட்ஸ் பிக்சர்ஸ் – ஸ்ரீ வினீத் ஜெயின், எஸ்.லக்‌ஷ்மண் குமார் தயாரிப்பில் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X).

ஆர்யா, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், ரைசா வில்சண்ட் ஆகியோர் நடித்துள்ளனர்

ரகசிய உளவாளியான இந்திய ரா அமைப்பில் இருக்கும் சரத்குமார் (Mr.X) பல வருடங்களாக அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருளை காப்பாற்றி பாதுகாத்து வருகிறார்.

அந்த முல பொருளை வேறு இடத்திற்கு மாற்றி வைக்கும் நேரத்தில் தனது மகன் மற்றும் மகளை விட்டு சரத்குமார் பிரிகிறார். தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் சரத்குமாரை கைது செய்யும் ரஷ்ய ராணுவம், அவர் பாதுகாத்து வந்த மூலப்பொருளையும் கைப்பற்றுவதோடு, அதை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்கிறது.

ரஷ்ய ராணுவத்தின் திட்டத்தை முறியடித்து, சரத்குமார் மற்றும் அணு ஆயுத மூலப்பொருளை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியை ரா அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையிலான குழு மேற்கொள்கிறது

இந்நிலையில் ராவின் இயக்குனரான மஞ்சு வாரியர் சரத்குமாரை காப்பாற்றுவதற்காக மற்றொரு ரா உளவாளியான கௌதம் கார்த்திக்கை அனுப்பி வைக்க அது தோல்வியில் முடிகிறது.

இதன் பின் மஞ்சு வாரியர் , சரத்குமார் மற்றும் அணு ஆயுத பொருட்களை மீட்டு வர ஆர்யா தலைமையிலான குழுவை ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கிறார்.

இறுதியில் நாயகன் ஆர்யா, சரத்குமார் மற்றும் அணு ஆயுத பொருட்களை மீட்டு இந்தியா கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதுதான் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தின் மீதிக்கதை.

கம்பீரமான உடல் தோற்றத்துடன் ரகசிய உளவாளியாக நடித்திருக்கும் ஆர்யா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். அப்பா மீதான கோபம், தங்கை பாசம், காதலி மீது காட்டும் பிரியம் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.

மிஸ்டர் எக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் வித்தி யாசமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக அறிமுகமாகியிருக்கும் கெளதம் கார்த்திக், ஸ்டைலான வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

ரா அமைப்பு அதிகாரியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், அமைதியாக வந்து இறுதிக்காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார். ரைசா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனேகா, ஜெயப்பிரகாஷ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இசையில் பாடல் மற்றும் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு படத்தை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு கற்பனை கதையுடன் சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு குடும்பத்தை விட நாடுதான் முக்கியம் என ரா உளவாளிகள் வாழ்வதை அழுத்தமாக பதிவு செய்வதுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை \விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் ஆங்கில பட பாணியில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மனு ஆனந்த்.

மொத்தத்தில் - ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) வல்லவனுக்கு வல்லவன்

ரேட்டிங் : 3. 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: