top of page

‘சட்டென்று மாறுது வானிலை ’ - விமர்சனம்

  • mediatalks001
  • 3 hours ago
  • 2 min read

BV Production நிறுவனத்தின்  சார்பில்   இயக்குநர் பாபு விஜய் தயாரிப்பு  மற்றும் இயக்கத்தில் ‘சட்டென்று மாறுது வானிலை ’


ஜெய், யோகி பாபு, மீனாட்சி  கோவிந்தராஜன் , கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்ய கதிர் ஆகியோர் நடித்துள்ளனர் .


சிறு வயதில் ஆதரவில்லாமல் அனாதை இல்லத்தில் வளரும் நாயகன் ஜெய் ஐ.டி.கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.


மற்றொரு பக்கம் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனின் அப்பாவான அமைச்சர் அரசியல் தலைவரான சரவண சுப்பையாவிற்கு 2 வதாக திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.


தன் அப்பாவின் தப்பான செயலினால் மீனாட்சி வீட்டை விட்டு வெளியேறி பெண்கள் ஹாஸ்டலில் தங்குகிறார்.


ஒரு கட்டத்தில் ஜெய், மீனாட்சியை கண்டதும் அவர் மேல் காதல் கொள்கிறார்.


இந்நிலையில் ஒரு பிரச்சனையில் இருந்து மீனாட்சியை ஜெய் காப்பாற்ற இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.


காதல் தம்பதிகள் இருவரும் தேன்நிலவிற்காக கொடைக்கானல் சென்று . அங்கு கருடன் ராம் நடத்தி வரும் ஹோட்டலில் தங்குகிறார்கள்.


வில்லனான கருடன் ராம் அங்கு தங்கும் புது மண தம்பதிகளின் அந்தரங்கங்களை ரகசிய கேமரா முலம் படம் பிடித்து விற்கும் கொடுர குணம் கொண்டவன் .


இந்நேரத்தில் அமைச்சர் தன் மகளான மீனாட்சியை கண்டுபிடித்து கொலை செய்ய நினைக்கிறார் . மறு பக்கம் சொத்துக்கு ஆசைப்பட்டு மீனாட்சியின் பழைய பாய் பிரண்டு ஜெய்யை அவரிடமிருந்து பிரிக்க நினைக்கிறான் .


இந்நிலையில் மீனாட்சி காணாமல் போக அவரை கொன்றதாக ஜெய்யை போலீசார் கைது செய்கின்றனர் .


இச் சுழலில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் பிணம் இருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைக்கிறது.


இறுதியில் கொலை செய்யப்பட்ட பெண் யார் ? மீனாட்சியை கொன்றதாக கைது செய்யப்பட்ட ஜெய் தான் நிரபராதி என்பதை நிருபித்தாரா ? கருடன் ராம் ஹோட்டலில் நடந்த அட்டுழியங்களை ஜெய் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘சட்டென்று மாறுது வானிலை ’


நாயகனாக நடித்திருக்கும் ஜெய் இளமை துடிப்பு மிக்க இளைஞராக காதல், நடனம், நடிப்பு, சண்டை என அனைத்திலும் தளபதி (cm) விஜய்யை நினைவுபடுத்தும் விதத்தில் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார் .


நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் இயல்பான நடிப்பால் காதல், பாசம், செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


ஹோட்டல் அதிபராக மிரட்டும் வில்லனாக கருடன் ராம் , யோகி பாபு, ஆதித்யா கதிர் ,சத்யன் , ஸ்ரீமன், ஆதித்ய கதிர், சரவண சுப்பையா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்க முடிகிறது. பின்னணி இசை கதைக்கு பக்க பலம் .


ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் உளள்து.


இயல்பான காதல் கதையுடன் இன்றைய சமூகத்தில் நடக்கிற சில அசம்பாவித சம்பவங்களை மையமாக வைத்து புது மண தம்பதிகளுக்கு விழிப்புணர்வாக தேன் நிலவிற்கு செல்லும் தம்பதிகளின் அந்தரங்க வீடியோ அவர்களுக்கு தெரியாமல் எப்படி எடுக்கப்படுகிறது. என்பதை அழுத்தமாக பதிவு செய்வதுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் ஒரு முழு நீள சஸ்பென்ஸ் திரில்லர் படமாக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாபு விஜய்


மொத்தத்தில் ‘சட்டென்று மாறுது வானிலை ’ – சமூக விழிப்புணர்வு


ரேட்டிங் - 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page