’பிளாஸ்ட்’ - விமர்சனம்
- mediatalks001
- 59 minutes ago
- 2 min read

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் ’பிளாஸ்ட்’
அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் ஆகியோர் நடித்துள்ளனர் .
கராத்தே பயிற்சி மாஸ்டராக இருக்கும் நாயகன் அர்ஜுன் மனைவி அபிராமி , மகள் ப்ரீத்தி முகுந்தன், தம்பி விவேக் பிரசன்னா என குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் தன்னுடைய மகளான பிரீத்தி முகுந்தனுக்கு சிறு வயது முதலே கராத்தே பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் எங்கு பிரச்சனை நடந்தாலும் யாருக்கு தப்பு நடந்தாலும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க கூடாது தைரியமாக அதனை தட்டி கேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார்.
இந்நிலையில் தொழிலதிபரான ஜான் கொக்கேன் அமைச்சரான பி.எல்.தேனப்பனுக்கு ரூ.7000 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்தை முடிக்க ரூ.1000 கோடியை லஞ்சமாக கொடுக்க சம்மதிக்கிறார் .
பி.எல்.தேனப்பனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அர்ஜுன் சிதம்பரம் மூலம் அமைச்சரின் டிரஸ்ட் வங்கி கணக்கில் மாற்றும் பணியை மேற்கொள்ளும் வேலையில் திடீரென ஒரு விபத்தில் சிக்கி க்கொள்ள போலீஸ் சிகிச்சைக்காக அவரை மருத்துவ மனையில் சேர்த்து அவரைப் பற்றி விசாரிக்கிறது .
இச் சுழலில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அர்ஜுன் சிதம்பரம் போலீசை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல அவருக்கு ரௌடியான பவன் உதவி செய்கிறார்.
இந்நிலையில் பிரீத்தி முகுந்தனின்தங்க சங்கிலியை பறிக்க ஒருவர் முயற்சிக்க, வழக்கம் போல் தனது அதிரடியால் அவரை அடித்து போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.
சிறிய திருட்டு என்று நினைத்து அர்ஜுனும், பிரீத்தி முகுந்தனும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்யும் போது, அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கிறது
போலீசில் அர்ஜுன் அளித்த புகாரால் கோபம் கொள்ளும் ரௌடி பவன் அர்ஜுன் குடும்பத்தை கொலை செய்வதற்காக தனது தம்பி பாலா ஹாசனுடன் சேர்த்து சில அடியாட்களை அனுப்பி வைக்கிறார்.
தங்கள் குடும்பத்தை காப்பாற்ற அதிரடியில் இறங்கும் அர்ஜுனின் குடும்பம் பாலா ஹாசனுடன் வந்த அனைவரையும் கொலை செய்து விடுகிறார்கள்.
இறுதியில் இது தங்கள் பிரச்சனை அல்ல மக்களுக்கான பிரச்சினை என்பதை தெரிந்து கொண்ட அர்ஜுனனும் பிரீத்தி முகுந்தனும் அந்த பிரச்சனையிலிருந்து மக்களை காப்பாற்றினார்களா ? அர்ஜுன் சிதம்பரம் அமைச்சரான பி.எல்.தேனப்பனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தாரா ? இல்லையா? என்பதுதான் ’பிளாஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.
கராத்தே மாஸ்டராக நடித்திருக்கும் அர்ஜுன் சிறப்பான நடிப்பில் மனைவி மீது பாசம் கொண்ட கணவராகவும் , தைரியத்துடன் மகளை வளர்க்கும் குருவாகவும், அதிரடி ஆக்ஷனுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
அர்ஜுன் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி தொடக்கத்தில் அமைதியான குடும்பத்தலைவியாக வருபவர் இடைவேளை பின் யாரும் எதிர்பார்க்காத அதிரடி நாயகியாக சண்டையில் அசத்தியுள்ளார் .
அர்ஜுன் மகளாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரீத்தி முகுந்தன் இயல்பான நடிப்புடன் நிஜ கராத்தே வீராங்கனை போல அதிரடியில் மிரட்டுகிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, போலீசாக வரும் திலீபன் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை கதை வேகத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு விறுவிறுப்பாக கொண்டு செல்ல துணை நிற்கிறது.
இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலையின் முக்கியத் துவத்தை அறிவுறுத்தும் கதையுடன் சுவாரஸ்யமான விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத விதத்தில் கதையை நகர்த்துவதுடன் பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்கும் விதத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன்
திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ்
ரேட்டிங் - 4 / 5





Comments