top of page

’ஹபீபி’ - விமர்சனம் 4.5 / 5 உணர்வுப்பூர்வமான ஒரு குடும்ப வாழ்க்கையின் பயணம்

  • mediatalks001
  • 3 days ago
  • 2 min read

நேசம் என்டர்டைன்மெண்ட் , ஜி கே எஸ் புரடக்ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில்  ’ஹபீபி’


கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனாஸ்ரீ , அன ஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், ரேகா குமணன்,மலர் கைசின்,ஸ்மத் பானு, அருள்குமார்,சன்சாகுல், சிறுவன் தீஹன் மற்றும் சிறுமி தீக்‌ஷாஸ் ஆகியோர் நடித்துள்ளனர் .


பரம்பரையாக கடைய நல்லூரில் குடும்பத்தினருடன் சேர்ந்து நெசவு தொழில் செய்து வருகிறார் இஸ்லாமியரான கஸ்தூரிராஜா . காலப் போக்கில் தொழில் நலிவடைவதால் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு பொருளாதார சிக்கல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.


இந்நிலையில் கஸ்தூரிராஜா தம்பி தனது மனைவி அனஸ்ரேயா ராஜனை குடும்ப பாதுகாப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்.


கஸ்தூரிராஜாவின் மகனான நாயகன் ஈசா இஸ்லாமிய பெண்ணான மாளவிகா மனோஜை காதலிக்கிறார்.

மாளவிகா மனோஜும் ஈசாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார் .


ஒரு இரவு நேரத்தில் மாளவிகா மனோஜை பார்ப்பதற்காக ஈசா அவரது வீட்டிற்குள் நுழையும்போது ஊர் மக்கள் பிடியில் சிக்கி கொள்கிறார் . ஊர் மக்கள் கஸ்தூரிராஜா முன்னிலையில் ஈசாவை பஞ்சாயத்தில் நிற்க வைக்கிறார்கள்.

பஞ்சாயத்து சட்டப்படி ஈசாவுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது .


இச் சுழலில் குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் ஈசா.


ஒரு கட்டத்தில் தன் மகனான ஈசாவுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து பெரியவர்கள் சம்மதத்துடன் தனாஸ்ரீ யை நிச்சயம் செய்கிறார் கஸ்தூரிராஜா.


இறுதியில் கஸ்தூரிராஜா நிச்சயித்த பெண்ணான தனாஸ்ரீ யுடன் ஈசாவுக்கு திருமணம் நடந்ததா ? ஈசா தன் காதலியான மாளவிகா மனோஜை மீண்டும் சந்தித்தாரா ? இல்லையா ? என்பதை உணர்வுபூர்வமான காதலை மிக அழகாக சொல்லும் படம்தான் ‘ஹபீபி’



முகமது யூசுப் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஸ்தூரிராஜா குணச்சித்திர நடிப்பில் குடும்பத் தலைவராக அனுபவ நடிப்பால் மனதை கவர்ந்து ரசிகர்களை கண் கலங்க வைக்கிறார் .


கதை நாயகனாக நடித்திருக்கும் ஈஷா அமைதியான நடிப்பில் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப உடல்மொழியில் இஸ்லாமிய இளைஞனாக பேச்சு , நடை , உடை என அனைத்திலும் உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மனோஜ் முகபாவனையில் மிக அழகாக திறமையான நடிப்பில் தன் கதாபாத்திரத்தை பூர்த்தி செய்கிறார் .


மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் தனாஸ்ரீ கதைகேற்றபடி சிறப்பாக நடிக்கிறார்


அனுஸ்ரேயா ராஜன்,ஜெயஸ்ரீ பினுராஜ்,ரேகா குமணன்,மலர் கைசின்,ஸ்மத் பானு, அருள்குமார்,சன்சாகுல், சிறுவன் தீஹன் மற்றும் சிறுமி தீக்‌ஷாஸ்ரீ என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்கின்றனர் .


இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பிரமாதம் , அருமை பின்னணி இசையும் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.


ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு தரம் .


நெசவுத்தொழில் செய்யும் இஸ்லாமிய குடும்பத்தை மையமாக கொண்ட கதையுடன் அழகிய மென்மையான காதல், கூட்டுக்குடும்பம், பொருளாதார சுழலால் வெளிநாட்டு பயணம் ஆகியவற்றுடன் திரைக்கதையில் இஸ்லாமிய மத மகிழ்ச்சியான மற்றும் துக்க நிகழ்வுகளை சினிமாத் தனம் இல்லாமல் மிக இயல்பான காட்சிகளால் அழுத்தமாக பதிவு செய்வதுடன் இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத இயல்பான இஸ்லாமிய குடும்ப கதையை  நேர்த்தியாக அனைவரும் ரசித்து பாராட்டும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மீரா கதிரவன்.


ரேட்டிங் - 4.5 / 5


மொத்தத்தில் ’ஹபீபி’ – உணர்வுப்பூர்வமான ஒரு குடும்ப வாழ்க்கையின் பயணம்







.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page