top of page

“டபுள் ஆக்குபன்ஸி” - விமர்சனம்

  • mediatalks001
  • 3 days ago
  • 2 min read


ACS அருண்குமார் (Benz Media) & குஷ்பூ சுந்தர் (Avni Movies) தயாரிப்பில்  இயக்குநர் அஸ்வின் கந்தசாமி  இயக்கத்தில்  ‘டபுள் ஆக்குபென்சி’


சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன்,விடிவி கணேஷ், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர் .


திருமணத்திற்கு பின் சில வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு கடவுளின் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்த குழந்தை இறந்து விடுகிறது.


இந்நிலையில் கடவுள் இல்லை என சொல்லும் போஸ் வெங்கட் தன் குழந்தைக்காக கடவுளிடம் மனம் உருகி வேண்ட மீண்டும் அந்த குழந்தைக்கு உயிர் கிடைக்கிறது.


ஆனால் உயிர் பெற்ற குழந்தை பெண்ணாக இருக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அபூர்வ சக்தி கொண்ட குழந்தையாக அந்த தம்பதிகளுக்கு கிடைக்கிறது.


இதனையடுத்து சில ஆண்டுகளுக்கு பின் நாயகி ரேஷ்மா வெங்கடேஷும் ,நாயகன் சந்தோஷும் ஒரு உடலில் இரு பாலின குணாதிசயம் கொண்ட உயிர்களாக வாழ்கின்றனர் .


இந்நிலையில் போஸ் வெங்கட் மற்றும் வினோதினி ஒரு விபத்தில் இறக்கின்றனர் .


இதனால் ஒரு உடலில் இரு பாலின குணாதிசயம் கொண்ட இருவரும் வேலையைத் தேடி சென்னை செல்கிறார்கள்.

காலையில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ் மருத்துவ ஆய்வகத்தில் வேலைக்கு சேர்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் வினோத் கிஷனை காதலிக்கிறார்.


மற்றொரு பக்கம் இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் பார் ஒன்றில் வேலை பார்க்க அங்கு வரும் நாயகி சம்யுக்தா விஸ்வநாதனை பார்த்ததும் காதல் கொள்கிறார்.


நாயகி ரேஷ்மா வெங்கடேஷும் ,நாயகன் சந்தோஷும் தங்கள் காதலுக்காக உண்மையான நிலையை வெளியே சொல்ல முடியாமல்

தவிக்கிறார்கள்.


ஒரு கட்டத்தில் பாரில் நண்பரான வி டி வி கணேஷ் சந்தோஷ் பெண்ணாக மாறுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் .


முடிவில் ரேஷ்மா வெங்கடேஷ் காதலனான வினோத் கிஷனுக்கும் , சந்தோஷ் தன் காதலியான சம்யுக்தா விஸ்வநாதனுக்கும் தங்களின் உண்மையான நிலையை உணர்த்தினார்களா ? இறுதியில் இருவரின் காதலின் நிலை என்ன? என்பதுதான் “டபுள் ஆக்குபன்ஸி” படத்தின் மீதிக்கதை.


கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் இயல்பான நடிப்பில் காதல், ஆக்ஷன் , ரொமான்ஸ் , என அனைத்திலும் சிறப்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.


இவருடைய காதலியாக வரும் சம்யுக்தா விசுவநாதன் நடிப்புடன் கவர்ச்சியில் ரசிகர்களை கவர்கிறார் .


நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ் சிறப்பான நடிப்பில் காதல், எமோஷனல், செண்டிமெண்ட் என அனைத்திலும் கவரும் விதத்தில் இருக்கிறார்.


இவருடைய காதலராக வரும் வினோத் கிஷன் வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெறுகிறார்.


தொழிலதிபராக வரும் விடிவி கணேஷ் வரும் காட்சிகள் ரசிக்க மற்றும் சிரிக்க முடிகிறது.


வில்லனாக நடித்திருக்கும் பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத் , போஸ் வெங்கட் மற்றும் வினோதினி என மற்ற கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது . பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.


சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.


ஒரு உடலில் இருக்கும் இரு பாலின உயிர்களுக்கு இடையே நடக்கும் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையுடன் காதல், உறவு, பாசம், எமோஷனல்,தவிப்பு என விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை யாரும் யுகிக்க முடியாத வகையில் இதுவரை யாரும் பார்த்திராத கதையாக புதுமையான முயற்சியாக அனைவரும் ரசிக்கும்படி கலகலப்பான திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி.


மொத்தத்தில் ‘டபுள் ஆக்குபென்சி’ – மனித பிறப்பில் ஒரு அர்த்த நாரி


ரேட்டிங் : 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page