‘எங்கள் தங்கம்’ - விமர்சனம்
- mediatalks001
- 1 day ago
- 2 min read

டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கத்தில் ‘எங்கள் தங்கம்’
சமந்தா, திகந்த் மஞ்சாலே, கௌதமி, ஆனந்த் , ஸ்ரீ லக்ஷ்மி, குல்ஷன் தேவய்யா, ,மன்ஜூஷா , சைதன்ய கிருஷ்ணா, ஸ்ரீமுகி ஆகியோர் நடித்துள்ளனர் .
சிறிய வயதிலிருந்து ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்து வரும் நாயகி சமந்தா ஆனந்த் ,,கௌதமி தம்பதிகளின் மூத்த மகன் டாக்டரான திகந்த் மஞ்சாலேவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
சில வருடங்களுக்குப் பின் திகந்த் மஞ்சாலேவின் தங்கை திருமணத்திற்கு கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிற்கு கணவருடன் சமந்தா வருகிறார்.
அரசியல்வாதியான ஆனந்தின் குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்கள் அன்பை பெற அமைதியான குடும்ப பெண்ணாக அனைவரிடத்தில் அன்பாக நடந்துக் கொள்கிறார்.
இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா அடியாள் ஒருவன் ஒரு கிராமத்தில் சமந்தாவை பார்த்ததாக சொல்ல , மேலும் தீவிரமாக சமந்தா குறித்து விசாரித்து வர அந்த கிராமத்துக்கு தன் அடியாளை அனுப்புகிறார் குல்ஷன் தேவய்யா.
சமந்தாவை பற்றி விசாரிக்க சென்றவன் தன் அடியாட்களுடன் சமந்தாவை கொலை செய்ய முயற்சிக்கும்போது எதிர்பாரா த விதமாக இறந்து விடுகிறான்.
இச் சுழலில் சிறையில் இருந்து தப்பிக்கும் குல்ஷன் தேவய்யா திகந்த் மஞ்சாலேவின் வீட்டிற்கு சென்று அவரின் தங்கை திருமண நேரத்தில் சமந்தாவை நேரில் சந்தித்து தன்னுடன் வந்துவிடு இல்லையென்றால் மொத்த குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார் .
ஒரு கட்டத்தில் குல்ஷன் தேவய்யா துப்பாக்கி முனையில் தன் அடியாட்களுடன் சமந்தாவின் வீட்டிற்க்குள் நுழைந்து அவரது குடும்ப உறுப்பினர்களை கொல்ல முயற்சி செய்கிறார் .
இறுதியில் நாயகி சமந்தா தன் குடும்ப உறுப்பினர்களை குல்ஷன் தேவய்யா கொலை திட்டத்திலிருந்து காப்பாற்றினாரா ?
சமந்தா யார் என்பதை அவரது குடும்பத்தினர் தெரிந்து கொண்டார்களா ? இல்லையா ? என்பதுதான் ‘எங்கள் தங்கம்’ . படத்தின் மீதிக்கதை.
சொர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமந்தா வில்லனிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற அதிரடியாக மாறும் காட்சிகளிலும் , அனைவரின் அன்பை பெறுவதற்காக ரசிக்கும்படியான ஒவ்வொரு முயற்சிகளும், அதிரடி ஆக்ஷனில் மிரட்டலான நடிப்புடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .
வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா அமைதியாக அதே நேரத்தில் அசத்தலான நடிப்பில் மிரட்டுகிறார் .
டாக்ட ராக சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா, என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்கின்றனர் .
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது .
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஒரு அமைதியான பெண் தன் குடும்பத்திற்காக புயலாக மாறும் கதையை மையமாக வைத்து விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் மகிழ்ச்சியான குடும்ப பின்னணியுடன் ஆக்ஷன், காமெடியுடன் கதையை நகர்த்தி அனைவரும் ரசிக்கும் ஜனரஞ்சகமான ஆக்ஷன் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி
மொத்தத்தில் ‘எங்கள் தங்கம்’ – குடும்பத்தை காக்க வந்த தங்கத்தின் தங்கம்.
ரேட்டிங் - 3.5 / 5





Comments