‘நூறு சாமி’ - விமர்சனம்
- mediatalks001
- 1 day ago
- 2 min read

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் ‘‘நூறு சாமி’
விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா , அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில் , கருணாஸ் லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர் .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் வாழ்ந்து வரும் ஸ்வாசிகா இளம் வயதில் கணவரை இழந்தவர்.
பொருளாதார சூழ்நிலை கஷ்டமாக இருந்தாலும் தன் இரண்டு மகன்களை நன்றாக படிக்க வைக்கிறார்.
இந்நிலையில் ஸ்வாசிகா, தன் மகன்கள் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது, மறுமணம் செய்ய விரும்புகிறார். தன் எண்ணத்தை மூத்த மகன் அஜய் திஷானிடம் சொல்லும் போது அவர் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க, அதிர்ந்து போய்விடுகிறார்.
சில வருடங்களுக்கு பின் தன் அம்மாவின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அஜய் திஷான் ஸ்வாசிகாவுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.
அவரது முடிவுக்கு ஆரம்பத்தில் எதிர்க்கும் அவரது இளைய சகோதரரும் ஆதரவு தெரிவிக்க, இரண்டு மகன்களும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள்.
அதன்படி மனைவியை இழந்த விவசாயியான விஜய் ஆண்டனியை ஸ்வாசிகாவுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர் .
இச் சுழலில் இத் திருமணத்திற்கு ஸ்வாசிகாவின் குடும்பமும் ,பாலாஜி சக்திவேலுடன் ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தினருடன் அண்ணன் கருணாஸ் தங்கை ஸ்வாசிகாவை கொலை செய்ய முயற்சிக்கிறார்.
இறுதியில் கருணாஸின் கொலை முயற்சியிலிருந்து ஸ்வாசிகா உயிர் தப்பித்தாரா ?
ஸ்வாசிகா குடும்பத்துடன் ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி மகன்கள் இருவரும் தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘நூறு சாமி’ ’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக அழுத்தமான செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் வாழ்ந்திருக்கும் ஸ்வாசிகா தனி ஒரு பெண்ணாக குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பான பாசம், , மனதின் ஆதங்கமான மறுமணம் செய்ய விருப்பம், சோகத்தை மின் விசிறியிடம் பரிமாறுவது என உணர்வுபூர்வமான ஆழமான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி மிக சிறப்பாக நடித்துள்ளார் .
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் விஜய் ஆண்டனி படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அமைதியாக நிறைவான நடிப்பில் பார்வையாளர்கள் மனதை கவர்கிறார் .
ஸ்வாசிகாவின் மகன்களாக நடித்திருக்கும் அஜய் திஷான், சக்தி இவர்கள் ஜோடியாக வரும் பாடினி குமார், காவ்யா அனில், தாய்மாமாவாக வரும் கருணாஸ், கிருஸ்துவ சிஸ்டராக வரும் லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளோடு நம்மை பயணிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு கிராமத்து அழகை கண் முன் கொண்டு வந்திருக்கிறார்.
2017 ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையுடன் இளம் விதவை பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் போராட்டமான பிரச்சனைகளை ஒரு விழிப்புணர்வுடன் விதவை பெண்களின் மறுவாழ்வுக்கு மறுமணத்தின் அவசியத்தை அழுத்தமாக சொல்வதுடன் கணினிமயமான இன்றைய சமுதாயம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சசி
மொத்தத்தில் ‘‘நூறு சாமி’ ’ – விதவை பெண்களின் வாழ்விற்கான விதை
ரேட்டிங் : 3.5 / 5





Comments