MediaTalks Logo
Header Advertisement
reviews
25 June 2026 at 11:05•1 Views

பூனி பியர்ஸ் : தி ஹிட்டன் ப்ரோடெக்டர்- விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
பூனி பியர்ஸ் : தி ஹிட்டன் ப்ரோடெக்டர்- விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

இயக்குநர் லின் ஹய்டா இயக்கத்தில், உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் பூனி பியர்ஸ் : தி ஹிட்டன் ப்ரோடெக்டர்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் – அனிமேஷன் | பேண்டஸி | அட்வென்சர் | காமெடி நிறைந்த 3D திரைப்படம்

சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சீன மக்கள் கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடும் நேரத்தில் அந்த மக்களை அழிக்க கொடூரமான அரக்கன் அங்கு வர அந்த அரக்கனை சக்தி வாய்ந்த கரடி அடித்து விரட்டுகிறது. அந்த கரடியிடம் மீண்டும் நான் வருவேன் என அந்த அரக்கன் கூறி செல்கிறான்.

இச் சுழலில் சில வருடங்களுக்குப் பிறகு காட்டில் மகிழ்ச்சியாக வாழும் கரடி சகோதரர்கள் பிரையர், பிராம்பிள் மற்றும் அவர்களது நண்பர் விக் ஆகியோர் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு பழமையான கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு புராணங்களில் வரும் நியான் என்ற மாய உயிரினத்தை சந்திக்கும் அவர்கள், எதிர்பாராத விதமாக அதிசய சக்திகளைப் பெறுகின்றனர்.

அந்த அதிசய சக்திகளை பெற்ற அவர்கள் “Eve City” என்கிற மாய மந்திரம் நிறைந்த அதிசய உலகத்தில் அவர்கள் செல்லும்போது மனிதர்களும் அழியாத உயிரினங்களும் இணைந்து வாழும் அங்கு பெரும் பிரச்சனையாக மிக பெரிய ஆபத்தில் அந்த அதிசய உலகம் இருப்பதை அறிந்து கொள்கிறார்கள்.

இறுதியில் தங்களுக்கு கிடைத்த புதிய சக்திகளைப் பயன்படுத்தி மாய மந்திரம் நிறைந்த அதிசய உலகத்தை காப்பாற்றி வெற்றி அடைந்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் பூனி பியர்ஸ் : தி ஹிட்டன் ப்ரோடெக்டர்.

சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமாய் வண்ணமயமான காட்சிகளில் மாய உலகத்தின் வடிவமைப்பு, மாய உயிரினங்கள், அதிரடியான சாகச தருணங்கள் மற்றும் குழந்தைகளை கவரும் கற்பனை அம்சங்கள் அனைத்திலும் அனிமேஷன் தரம் மிகச்சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு காட்சிகளையும் உயிரோட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் 3D-யில் பார்க்கும் அனுபவம் பாராட்டும்படி உள்ளது

இன்னும் சிறப்பாக சீன புத்தாண்டு மரபுகளும், நியான் (Nian) புராணக் கதையும் கதையுடன் இயல்பாக இணைக்கப்பட்டிருப்பது படத்திற்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறது.

பின்னணி இசை, சவுண்ட் டிசைன் மற்றும் ஆக்ஷன் காட்சிகளின் அமைப்புடன் தமிழ் டப்பிங்கும் மிகவும் இயல்பாக அமைந்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

உணர்வுப்பூர்வமான தருணங்களும், நட்பு மற்றும் குடும்ப உறவுகளை வலியுறுத்தும் காட்சிகளும் குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களையும் கவரும் வகையில் பிரையர், பிராம்பிள், விக் ஆகியோரின் காமெடி காட்சிகளுடன் தனது பொறுப்புகள் மற்றும் அடையாளத்தை எதிர்கொள்ளும் பயணம் கதைக்கு கூடுதல் பலத்தை வழங்குகிறது.

உலகத் தரத்தில் அமைந்துள்ள கண்களை கவரும் தரமான அனிமேஷன்

3D காட்சிகள்,பிரம்மாண்டமான Eve City என விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும்படி குடும்ப உணர்வுகளை அழகாக கலந்து பொழுதுபோக்கு நிறைந்த ஒரு தரமான 3D அனிமேஷன் திரைப்படம். இந்தப் படம் அனிமேஷன் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

பூனி பியர்ஸ் : தி ஹிட்டன் ப்ரோடெக்டர் – குழந்தைகள் கொண்டாடும் அதிசய உலகம்

ரேட்டிங் : 4 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: