MediaTalks Logo
Header Advertisement
reviews
27 June 2026 at 00:00•1 Views

‘அங்கீகாரம் ’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘அங்கீகாரம் ’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் தயாரிப்பில் இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் ‘அங்கீகாரம் ’ .

கே.ஜெ.ஆர் , விஜி வெங்கடேஷ், , ரமா, வசுந்தரா, அஜித் கோஷி, சிந்தூரி , அந்தோணி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் ஆகியோர் நடித்துள்ளனர் .

சென்னையில் சிறந்த தடகள வீரரான நாயகன் கே.ஜெ.ஆர் தூய்மை ப் பணியாளராக வேலை செய்யும் தன் தாய் ரமா மற்றும் வழக்கறிஞராகப் பயிற்சி பெறும் தங்கை இசபெல்லாவுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்திய அளவில் மிக சிறந்த வீரனாக காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் நாயகன் கே.ஜெ.ஆர் பயிற்சியாளராக இருக்கும் வசுந்தரா முன்னிலையில் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறார்.

இச் சுழலில்மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்.

இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாக வெற்றி பெறும் நேரத்தில் மைதானத்தில் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாத நிலை ஏற்படுகிறது.

சில நாட்களுக்கு பின் காமன்வெல்த் போட்டி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வருகிறது .

கே.ஜெ.ஆர் தனது கடுமையான பயிற்சினால் சான்றிதழ் முலம் முழு உடற் தகுதி பெற்று இருந்தும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெயர் பட்டியலில் இவரது பெயர் நிராகரிக்கப்படுகிறது.

இந்நிலையில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள அவர்கள் அனைவரும் கே.ஜெ.ஆரை அவமானப்படுத்துகின்றனர்

முடிவில் நாயகன் கே.ஜெ.ஆர் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள நீதி கேட்டு நீதிமன்றம் செல்கிறார்.

இறுதியில் நீதிமன்றத்தில் நாயகன் கே.ஜெ.ஆருக்கு ஆதரவாக நீதி கிடைத்ததா ?

தடகள வீரனாக காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டாரா ? இல்லையா ? என்பதுதான் ‘அங்கீகாரம் ’ படத்தின் மீதிக்கதை.

தடகள வீரராக நடித்திருக்கும் கே.ஜெ.ஆர் இயல்பான நடிப்பில் அறிமுக நாயகன் போல இல்லாமல் குடும்பம் முதல் தாய்,தங்கை மீது கொண்ட பாசம், எமோஷனல் , ஆக்ஷன் என அனைத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

குறிப்பாக தனக்காக நீதிமன்றத்தில் வாதாடும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் பார்வையில் கைத்தட்டல் பெறுமளவில் ஆதிரன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் .

தூய்மை பணியாளராக வரும் ரமா , இவரது மகளாக வரும் இசபெல்லா , பெண் வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி விஸ்வநாத் ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர் .

பயிற்சியாளராக வரும் வசுந்தரா, நீதிபதியாக வரும் ரங்கராஜ் பாண்டே,, மோகன் ராம் , அமைச்சராக வரும் மன்சூர் அலிகான் ,விஜி வெங்கடேஷ், , அஜித் கோஷி,செல்வி, ஜானகி, ராம்ஜி, அருள் டி. சங்கர், கார்த்திக், அந்தோணி, ஷான், விமல்குமார் என அப்படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு தடகள விளையாட்டு வீரனின் கதையை மையமாக வைத்து திறமையும் , கடுமையான உழைப்பும் இருந்தும் அரசியல் பலம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் சிறந்த விளையாட்டு வீரர்கள் நிராககரிக்கப்படுவதை விறு விறுப்பான திரைக்கதையில் அழுத்தமாக பதிவு செய்வதுடன் அனைவரும் ரசிக்கும் மிக சிறந்த படைப்பாக திரைபடத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் தென்பாதியான்

மொத்தத்தில் ‘அங்கீகாரம் ’ – பாராட்டப்படும் ஆக சிறந்த படைப்பு

ரேட்டிங் : 4 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: