‘ஹார்ட்டின்’- விமர்சனம்
- mediatalks001
- 5 days ago
- 2 min read

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் ‘ஹார்ட்டின்’
சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா, வாட்ஸ்-அப் மணி, டெப்னிதா ஆகியோர் நடித்துள்ளனர் .
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தமிழ்நாட்டில் உள்ள உணவகம் போல தனது நண்பன் வாட்ஸ்-அப் மணி நடத்தும் உணவகத்தில் நாயகன் சனந்த் வேலை பார்த்து வருகிறார்.
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணான இமயா சனந்த்திடம் நண்பராக பழகுகிறார்.
இந்நிலையில் இமயா சனந்த் மீது காதல் கொள்ள ,,அவரது காதலை சனந்த் ஏற்க மறுக்கிறார்.
இச் சுழலில் மனதார காதலித்த முன்னாள் காதலி மடோனா செபாஸ்டியன் தன் காதலை ஏற்க மறுத்ததால் சனந்த் இமயாவை நண்பராக பார்க்கிறார் .
மடோனா செபாஸ்டியன் சனந்த்தின் காதலை நிராகரித்தது தெரிந்து கொண்ட பிறகும் ஒரு கட்டத்தில் அவரை காதலிக்கும் இமயாவை சனந்தும் காதலிக்கிறார்.
இமயாவின் காதலுக்கு பின் மகிழ்ச்சியான வாழ்ந்துக் கொண்டிருக்கும் சனந்த் வாழ்க்கையை ஒன்றாக தொடங்க திட்டமிடும் நேரத்தில் நிகழும் விபத்தில் தலையில் அடிபட்டு தனது சில வருட நினைவுகளை இழந்து விடுகிறார்.
விபத்துக்குப் பிறகு இமயாவின் காதல் நினைவுகளை இழந்த சனந்த், தனது பழைய காதலை மறக்காமல் காதலி மடோனாசெபாஸ்டினை தேடி ஊட்டிக்கு செல்கிறார்.
சனந்துக்கு மறந்த நினைவுகளை திரும்ப பெறுவதற்காக இமயாவும், வாட்ஸ்-அப் மணியுடன் சேர்ந்து ஊட்டிக்கு செல்ல இவர்களை பார்த்து மடோனா செபாஸ்டின் அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியில் நாயகன் சனந்தின் காதலை மடோனா செபாஸ்டின் ஏற்றுக்கொண்டாரா ?
மறந்த நினைவுகள் மீண்டும் கிடைத்து சனந்துக்கு இமயாவுடன் திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பதுதான் ‘ஹார்ட்டின்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சனந்த் காதல் , தவிப்பு, ஏக்கம் என உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அறிமுக நாயகியாக நடித்திருக்கும் இமயா இயல்பான நடிப்பில் தன் நாயகனிடம் காதலை சொல்லும்போதும் , காதலின் வலியையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் விதமும் ரசிக்கும்படியான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி , அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா என மற்ற வேடங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு மெலோடி ரகம். பின்னணி இசை கதையுடன் பயணிக்கிறது.
ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன். விஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .
ஒரு விபத்தால் சில வருட நினைவுகளை இழக்கும் நாயகனின் இயல்பான ஒரு காதல் கதையை மையமாக வைத்து படத்தின் முதல்பாதியில் தோல்வியடைந்த காதலுடன் புதிய காதல் , விபத்து அடுத்த இரண்டாம் பாதியில் முன்னாள் காதலியின் நினைவுகள், காதலியுடன் மகிழ்ச்சியான சந்திப்பு என காதலின் அழகான வாழ்வியலுடன் நினைவுகள் மற்றும் உறவுகளின் மதிப்பை அழுத்தமாக சொல்வதுடன் அனைவரும் ரசிக்கும் மென்மையான காதல் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கிஷோர் குமார்
மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’ – என்றென்றும் காதல்
ரேட்டிங் : 3 / 5





Comments