‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணைய தொடர் - விமர்சனம்
- mediatalks001
- 1 day ago
- 2 min read

எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரிப்பில் சவிர் சுதாகர் இயக்கத்தில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணைய தொடர் ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.
வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் ,விவேக் பிரசன்னா ,சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர் .
கிரிக்கெட் விளையாட்டில் திறமையாக விளையாடும் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜெகபர் சாதிக் மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் சேர்ந்து ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற அணியை உருவாக்கி கிராமத்தில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்கள்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி)-ன் தீவிர ரசிகர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.
அதன்படி, தங்களது கிராமத்தில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் இவர்களது அணி பங்கேற்று விளையாடி வரும் நேரத்தில் , கிரிக்கெட் வீரர் வீர் சிங் விளையாடும் (எம்.எஸ்.டோனி)- கடைசி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில் நாயகி லாவண்யா அன்பழகனும் நாயகன் வைபவ் முருகேசனும் காதலர்களாக இருக்கும் நிலையில் ,, ஒரு சிறிய பிரச்சனையில் இருவரும் பேசி கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இச் சுழலில் அந்த ஊரின் தலைவராக இருக்கும் மொட்டை ராஜேந்திரனின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரிய கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இந்த கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அதன் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தை வென்று, அதன் மூலம் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்கலாம் என வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜெகபர் சாதிக் மூன்று பேரும்திட்டம் போடுகின்றனர் .
ஊர் தலைவர் மொட்டை ராஜேந்திரனின் திடீர் மரணத்தால் இவர்கள் வெற்றி பெற்ற நிலையிலும் இறுதிப் போட்டி நடத்தப்படாமல் நின்று விடுகிறது.
சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆசைப்படும் மூவரும் ஊர் தலைவரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் போட்டியின் ரன்னர் பரிசுத் தொகையை ரூபாய் 30 ஆயிரம் திருடி, அதை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க சென்னையில் இருக்கும் தன் நண்பனுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
இந்நிலையில் டீ கடை நடத்தும் விவேக் பிரசன்னாவிடம் ரூபாய் 10 ஆயிரம் வாங்கி கொண்டு கிரிக்கெட் பார்ப்பதற்கு அழைத்து செல்வதாகக் கூறி விட்டு அவருக்கு பதிலாக லாவண்யா அன்பழகனுடன் டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் மூன்று நண்பர்களும் சென்னைக்கு செல்கிறார்கள்.
தங்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருப்பவர்கள், தங்களிடம் இருக்கும் டிக்கெட் போலி என்று தெரிந்ததும் பேரதிர்ச்சியடைகிறார்கள். இருந்தாலும், எப்படியாவது தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்துவிட்டு தான் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு எடுக்கும் நண்பர்கள், அடுத்த போட்டி நடப்பதற்குள் அதற்கான பணத்தை தயார் செய்யும் முயற்சி செய்யும்போது சரத் மூலம் கிரிக்கெட் சூதாட்டம் விளையாடும் சம்பத் ராமிக்கு கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு உதவி செய்ய போகிறார்கள்.
இதே நேரத்தில் ஊர் பஞ்சாயத்தில் பணத்தை திருடியது இவர்கள்தான் என ஊர் முழுவதும் தெரிய வருகிறது.
இறுதியில் நான்கு பேரும் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி) தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்தார்களா ?
கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்த நான்கு பேரை வைத்து விளையாடிய சம்பத்ராம் வெற்றி பெற்றாரா ? இல்லையா?
ஊர் தலைவரின் அலுவலகத்தில் திருடிய பணத்தை திருப்பி செலுத்தினார்களா? இல்லையா ? என்பதுதான் 6 அத்தியாயங்களான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணைய தொடரின் மீதிக்கதை.
கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக் ஆகியோர் கதாபாத்திரத்துடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
ஊர் தலைவராக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், டீக்கடை நடத்தும் விவேக் பிரசன்னா, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் சம்பத்ராம் , வார்டன் சரத் என தொடரின் கதையில் நடித்த அனைவரும் கதையோடு பயணிக்கும் விதத்தில் இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரத், இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது .
ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் அழகாவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் திறமையாக விளையாடும் இளைஞர்கள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி) தல விளையாடும் போட்டியை நேரில் பார்க்க ஆசைப்பட்டு சென்னை வருகின்றனர் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் , சிக்கல்களையும் மையமாக கொண்ட கதையுடன் கிரிக்கெட் ஆசை, காதல், நட்பு, உணர்வுகள், கோபம் ஆகியன கலந்த திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான கிரிக்கெட்டை விரும்பும் ரசிகர்கள் கொண்டாடும் தொடராக இயக்கியுள்ளார் இயக்குநர் சவிர் சுதாகர் .
மொத்தத்தில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ – இளைஞர்களுக்கு விழிப்புணர்வான அறிவுரை
ரேட்டிங் : 3.5 / 5





Comments