‘கட்டா குஸ்தி 2’ - விமர்சனம்
- mediatalks001
- 2 days ago
- 2 min read

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – டாக்டர் ஐசரி கே.கணேஷ், விஷ்ணு விஷால் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ .
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், லிசி ஆண்டனி ,கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ .
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கட்டா குஸ்தி’ 2 உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கோயம்புத்தூரில் நாயகன் விஷ்ணு விஷால், மனைவி ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பெண் குழந்தை சாராவுடன் வாழ்ந்து வருகிறார் .
மல்யுத்த வீராங்கனையான ஐஸ்வர்யா லட்சுமி அரசாங்க பணியில் இருப்பதால் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு வீட்டை பராமரிப்பது , மகளை பள்ளிக்கு அழைத்து செல்வது முதல் மல்யுத்தத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வரும் மனைவி ஐஸ்வர்யா லட்சுமிக்கு பொறுப்புள்ள கணவனாக பக்க துணையாக அனைத்து உதவிகளையும் விஷ்ணு விஷால் செய்து வருகிறார்.
விளையாட்டு விழாவில் வீராங்கனையாக தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு அமைச்சர் கையால் பதக்கத்தை பெற்றவுடன் தனது அனைத்து வெற்றிக்கு காரணம் விஷ்ணு விஷால்தான் என சொல்ல,, கோபம் கொள்ளும் பயிற்சியாளர் ஐஸ்வர்யா லட்சுமியை பழிவாங்க அதற்கான சதி வேலைகளை செய்கிறார் ..
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி, தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது, ஆசிரியர் மூலம் தன் மகள் சாரா ஒழுங்காக படிக்காததை தெரிந்து கொண்டவுடன் கோபத்தினால் ஐஸ்வர்யா லட்சுமிக்கும், விஷ்ணு விஷாலுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் பயிற்சியாளர் விஷ்ணு விஷாலிடம் ஐஸ்வர்யா லட்சுமிக்கு வரும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருத்துவரை தொடர்பு கொள்ள சொல்கிறார் .
அவரை தொடர்பு கொள்ளும் விஷ்ணு விஷால் அவர் தரும் மருந்துகளை ஐஸ்வர்யா லட்சுமிக்கு தெரியாமல் சாப்பாட்டில் கலந்து கொடுக்கிறார்.
இதனையடுத்து விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமிக்கு தினமும் கொடுக்கும் சாப்பாட்டில் கலந்து கொடுக்கும் நிலையில், தேசிய அளவிலான தகுதி போட்டியில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா லட்சுமி அதில் தோல்வி அடைகிறார்.
இச் சுழலில் தோல்வியடைந்த ஐஸ்வர்யா லட்சுமியை போதை மருந்து உட் கொண்டதாக கூறி ஒரு வருடத்திற்கு எந்த மல்யுத்த போட்டியிலும் கலந்துக் கொள்ளக் கூடாது என மேலிடம் உத்தரவு போடப்படுகிறது.
தனது தோல்விக்கு காரணம் விஷ்ணு விஷால் என முடிவு செய்யும் ஐஸ்வர்யா லட்சுமி மகளுடன் விஷ்ணு விஷாலை பிரிந்து வாழ்ந்து வருகிறார் .
முடிவில் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்டு நீதி மன்றம் செல்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
முடிவில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி இருவருக்கும் நீதி மன்றத்தில் விவாகரத்து கிடைத்ததா?
ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் மல்யுத்த போட்டிகளில் கலந்துக் கொண்டாரா ? இல்லையா? ஐஸ்வர்யா லட்சுமியுடன் சேர்ந்து வாழ விரும்பும் விஷ்ணு விஷால் இறுதியில் வெற்றி பெற்றாரா? இல்லையா ?, என்பதுதான் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் மிக இயல்பான நடிப்பில் குடும்ப தலைவனாக மனைவி ,மகள் மீது கொண்ட பாசம், சண்டை ,காமெடி, தவிப்பு ,உருக்கம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
“அப்படி போடு..போடு” பாடலுக்கு டீச்சரான மோக்ஷாவுடன் போடும் குத்தாட்டம் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி பெண் குழந்தைக்கு அம்மாவாகவும், குஸ்தி களத்தில் எதிராளியுடன் முரட்டுத்தனத்துடன் மல்லுக்கட்டும் மல்யுத்த வீராங்கனையாகவும் ,கணவருக்கு எதிராக களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலையில் மனைவியாகவே அவரை புரட்டி எடுக்கும்போதும் உடல் மொழியில் மல்யுத்த விளையாட்டு வீராங்கனையாக சிறந்த நடிகையாக அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.
விஷ்ணு விஷால் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா அப்பாவிடம் காட்டும் பாசம்,அம்மா மீது கோபம் , ஆட்டம் , பாட்டு என அனைத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகான மோக்ஷா ரசிகர்களின் மனதை கவர்கிறார் .
முனிஷ்காந்த், காளிவெங்கட், கருணாகரன், கருணாஸ் , லிசி ஆண்டனி,கஜராஜ், ஸ்ரீஜா ரவி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
திரைக்கதைக்கு பக்க பலமாக சிறப்பு தோற்றத்தில் நீதிபதியாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது .
ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கர் ஒளிப்பதிவு அழகாகவும் சிறப்பாக இருக்கிறது.
ஒரு இயல்பான குடும்ப பின்னணியில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கக்கூடிய சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் செல்லா அய்யாவு .
மொத்தத்தில் ‘கட்டா குஸ்தி 2’ – சிரித்து மகிழ சிறந்த படம்
ரேட்டிங் : 4.3 / 5





Comments