MediaTalks Logo
Header Advertisement
reviews
24 July 2026 at 19:16•1 Views

'ஜனநாயகன் ’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
'ஜனநாயகன் ’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில்  'ஜனநாயகன் ’

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, நாசர் மற்றும் சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நாயகன் விஜய் ரௌடிகளிடமிருந்து அரசியல் பிரமுகரை காப்பாற்றுவதால் ஜெயிலர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் விஜய்க்கு நெருக்கமான நட்பு உருவாகிறது.

இந்நிலையில் உடல்நிலை மோசமான தனது தாயார் ரேவதியை சந்திக்க விஜய்க்கு சிறப்பு அனுமதி வாங்கித் தரும் கௌதம் வாசுதேவ் மேனன், அதனால் தனது பதவியை இழக்கிறார்.

சிறையிலிருந்து வெளியே வரும் விஜய், கௌதம் வாசுதேவ் மேனனையும் அவரது மகள் மமிதா பைஜூவையும் சந்திக்க செல்கிறார். இதற்கிடையே விபத்து ஒன்றில் எதிர்பாராத விதமாக கௌதம் வாசுதேவ் மேனன் உயிரிழக்கிறார்.

அதன்பின் மமிதா பைஜூவை தன் மகளாக பாவித்து விஜய் வளர்க்கிறார்.

பயந்த சுபாவம் கொண்ட மமிதா பைஜூவை தைரியமான பெண்ணாக மாற்றி, இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பதே விஜய்யின் லட்சியமாகிறது.

இதற்கிடையில் ஆப்பிரிக்காவில் வன்முறைகளை நிகழ்த்திய பாபி தியோல், இந்தியாவில் ஒரு பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடுகிறார் .

இந்த நிலையில், மமிதா பைஜூக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மகளை காப்பாற்றும் விஜய், யாரை கொலை செய்த குற்றத்திற்காக சிறைக்கு சென்றாரோ அவரால் தான் தனது மகளுக்கு பிரச்சனை வந்தது என்பதை அறிந்துக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் தனது மகளை காப்பாற்ற வந்த விஜய்யை பார்த்து பாபி தியோல் அதிர்ச்சி அடைகிறார் .

இறுதியில் நாயகன் விஜய் மமிதா பைஜூவை இராணுவ அதிகாரியாக உருவாக்கினாரா? பாபி தியோலின் சதி திட்டத்தை நாயகன் விஜய் முறியடித்து மக்களை காப்பற்றினாரா? இல்லையா ? என்பதுதான் ‘ ஜனநாயகன் ’ படத்தின் மீதிக்கதை.

நாயகன் தளபதி விஜய் வழக்கமான பாணியில் நடிப்பதை தவிர்த்து அதிரடி நாயகனாக பஞ்ச் வசனங்களில் தனது தனித்துவமான முத்திரை பதித்து நடிப்பில் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே கவர்ச்சி இல்லாமல் கதைகேற்றபடி நடித்துள்ளார் .

நேர்மையான காவல்துறை உயரதிகாரியாக இருந்து, பின்னர் ஏற்பட்ட அவமானத்தால் வில்லனாக மாறும் கதாபாத்திரத்தில் பாபி தியோல் ரசிகர்களை கவர்கிறார் .

விஜய்யின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கும் மமிதா பைஜூ இளமை துள்ளும் நடிப்பில் சித்தா என்று விஜய்யை செல்லமாக அழைக்கும் காட்சிகளிலும், அவரிடம் இருந்து விலக நினைக்கும் காட்சிகளிலும் நடிப்பில் அசத்துகிறார் .

ஜெயிலராக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அரசியல்வாதியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், கலெக்டராக நடித்திருக்கும் பிரியாமணி, விஞ்ஞானியாக நடித்திருக்கும் நரேன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், விஜயின் அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி, நாசர் ,சுனில் தொழிலதிபராக நடித்திருக்கும் ஜி.எம். சுந்தர் என படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு அழகையும் பிரமாண்டத்தையும் சேர்த்திருக்கிறது.

தன் வளர்ப்பு மகளை தைரியமான பெண்ணாக மாற்றுவதற்கு ஒரு தந்தை எடுக்கும் முயற்சிகளை மையமாக கொண்ட கதையுடன் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் வசனங்களுடன் அழுத்தமில்லாத குழப்பமான திரைக்கதை அமைப்பில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து கிராபிக்ஸ் காட்சிகளின் ஆதிக்கத்துடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எச். வினோத்

மொத்தத்தில் : எதிர்பார்த்து வரும் ரசிகர்களை ஏமாற்றும் ‘ ஜனநாயகன் ’

ரேட்டிங் : 2.2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: