MediaTalks Logo
Header Advertisement
reviews
7 August 2026 at 18:12•1 Views

'ஜி. டி .என்' ​​(ஜி.டி.நாயுடு) - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
'ஜி. டி .என்' ​​(ஜி.டி.நாயுடு) - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

கோயம்புத்தூரில் வாழும் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜி.டி.நாயுடு உலக நாடுகள் கொண்டாடிய மாபெரும் விஞ்ஞானியாக பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து விடா முயற்சியில் தனது உழைப்பின் மூலம் மிக பெரிய தொழிலதிபராகி மக்கள் போற்றும் ஆளுமை கொண்ட மனிதராக வலம் வரும்போது அவரது வளர்ச்சியை பிடிக்காத ஆங்கிலேயர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் பல பிரச்சனையான சிக்கல்களை ஏற்படுத்தி அவரை வீழ்த்த முயன்றபோது திறமைமிக்க தன் சாமார்த்தியமான திட்டத்தினால் அவர் மீண்டு வருவதுதான் ‘ஜி.டி.என்’ படத்தின் கதை .

ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாதவன் தன் கம்பீரமான தோற்றத்தில் உடல் மொழியில் இளமைக்கால தோற்றம் முதல் முதுமைக்கால தோற்றம் வரை இயல்பான நடிப்பில் இனி ஜி.டி.நாயுடு என்றால் மாதவன்தான் என ரசிகர்கள் மனதில் பதியும்படி அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .

அம்பலபரா கிருஷ்ணன் என்ற வரித்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெயராம் வில்லத்தனம் கலந்த நடிப்பில் நேர்மையான அதிகாரியாக வழக்கமான நடிப்பில் பாராட்டு பெறுகிறார்.

ஜி.டி.நாயுடுவின் நண்பராக ராமையா பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜின் தோற்றம் மற்றும் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் .

நாயகியாக துஷாரா விஜயன், பிரியா மணி, அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன், டீஜே அருணாச்சலம், மோகன் ராமன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார், பிரிகிடா சாகா, ஷில்பா ஸ்ரீகுமார் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது .

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையும் ,பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .

தமிழ்நாட்டின் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட கதையுடன் சுவாரஸ்யமான விறு விறுப்பான திரைக்கதைஅமைப்பில் ஜி.டி. நாயுடுவின் வாழ்வியலில் நடந்த சாதனைகளுடன் அவர் கடந்து வந்த சோதனைகள் நிறைந்த போராட்டங்களை நேர்த்தியாக சொல்வதுடன் ரசிகர்கள் அனைவரும் பாராட்டும் விதத்தில் அனைத்து விருதுகள் பெறுமளவில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்,

ரேட்டிங் - 4 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: