MediaTalks Logo
Header Advertisement
reviews
8 August 2026 at 16:00•1 Views

‘டிசி’ (DC) - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘டிசி’ (DC) - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ (DC) .

லோகேஷ் கனகராஜ், சஞ்சனா, வாமிகா கபி, கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய், கிரிஷ் தயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர் .

கஸ்தூரி ராஜா,தனது மகனான லோகேஷ் கனகராஜை திறமையாக படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்வான நிலையில் தன் மகனை உருவாக்க நினைக்கும்போது தனது மாமன்களை கொலை செய்துவிட்டு குற்றவாளியாகி லோகேஷ் கனகராஜ் சிறைக்கு செல்கிறார்.

இதனால் மனமுடைந்து போன கஸ்தூரி ராஜா தன் கனவை சிதைத்த லோகேஷ் கனகராஜிடன் பேசாமல் அவரிடம் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார் .

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தலைமையில் அவரது அடியாட்கள் போலீஸாரிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்து கடத்துகின்றனர் .

மேலும் போலீஸாரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு உதவி செய்யும் முயற்சியில், லோகேஷ் கனகராஜ் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்கிறார்.

அதே நேரத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்கிறார்.

துப்பாக்கி கடத்தலுடன் ஒரு போலீஸ் அதிகாரியை கொலை செய்ததால் லோகேஷ் கனகராஜை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகி ஒரு இடத்தில் தங்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், சஞ்சனாவை சந்திக்கிறார்.

சஞ்சனாவுடனான நட்பு லோகேஷ் கனகராஜின் மனநிலை மாறி , நெருக்கமான உறவை ஏற்படுத்தும் நேரத்தில், லோகேஷ் கனகராஜை பிடிப்பதற்காக போலீஸார் அங்கு வருகின்றனர். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சஞ்சனா பரிதாபமாக சுட்டுக் கொல்லப்படுகிறார்.

சஞ்சனாவின் மரணத்தினால் போலீஸாரின் மீதுள்ள கோபத்துடன் அங்கிருந்து தப்பித்து செல்லும் லோகேஷ் கனகராஜ், தனக்கு பிடிக்காத விபச்சார வாழ்க்கை வாழும் வாமிகா கபியை சந்திக்கிறார்.

அந்த இடத்தில் இருந்து அவரை காப்பாற்றுகிறார்.

ஒரு கட்டத்தில் வாமிகா கபி , லோகேஷ் கனகராஜூடன் இணைந்து பயணிப்பதுடன் தன்னை சீரழித்த மருத்துவரை வாமிகா கபி கொலை செய்கிறார்.

இதனால் இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றனர்.

இறுதியில் லோகேஷ் கனகராஜும் ,வாமிகா கபியும் போலீஸார் பிடியில் சிக்கினார்களா ?

தன்னுடன் பேசாமல் இருக்கும் கஸ்தூரி ராஜாவை , லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேசினாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘டிசி’ (DC)

தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் அதிரடி நாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்திற்கு தேவையான மாஸ் தன்மையுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார் ..

நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபி விபச்சார வாழ்க்கையின் வலியையும் வேதனையையும் முகபாவனைகளில் நேர்த்தியாக வெளிப்படுத்தி திறமையான நடிப்பை வெளிபடுத்துகிறார் .

மற்றொரு நாயகியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சனா ஏ.கே அசத்தலாக நடிப்பதுடன் இறுதியில் ரசிகர்களின்

மனதை கனக்கச் செய்கிறார் .

தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு கச்சிதமான தேர்வாக இருக்கின்றனர். தங்களது கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து, அனைவரும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அவரது இசை கூடுதல் விறுவிறுப்பையும் பரபரப்பையும் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி, சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஆங்கிய பட பாணியில் ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

அடக்கு முறை கலாசாரத்துடன் இரத்தமும் சதையும் கலந்த வன்முறையான கதை களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதில் இருக்கும் ஆழத்தின் வெளிப்பாடான இயல்பான வாழ்க்கை தன்மை ,அழகிய காதல் ,கோபம், எதிர்பார்ப்பு, ஏக்கம், ஏமாற்றம் என அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக சொல்வதுடன் ஆக்‌ஷன் பட ரசிகர்கள் கொண்டாடும் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

மொத்தத்தில் ‘டிசி’ (DC) – காதல் கலந்த வன்முறை

ரேட்டிங் : 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: