MediaTalks Logo
Header Advertisement
reviews
21 August 2026 at 19:37•1 Views

‘ராம் அன்ட் லீலா’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘ராம் அன்ட் லீலா’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

நாயகன் ரியோவுக்கு தந்தையான சேத்தன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் நிலையில் திருமணத்திற்காக பல பெண்களை பார்த்தும் எல்லா பெண்களும் ஏதாவது ஒரு காரணத்தில் ரியோவை நிராகரிக்கின்றனர் .

இந்நிலையில் ரியோ நண்பனான பாலாஜி தியாகராஜன் தயாளன் சொல்லும் யோசனையில் இரயிலில் தினமும் பயணிக்கும் நாயகி வர்டிகாவை பார்த்ததும் அவரது அழகில் மயங்கி அவரை காதலிக்க தொடங்குகிறார் .

வர்டிகாவும் அவரது காதலை ஏற்று சில நிபந்தனைகளுடன் அதாவது மாலை 6 மணிக்கு மேல் நான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன், அதனால் 6 மணிக்கு மேல் சந்திக்க கூடாது என் குடும்பத்தினர் கண்டிப்பானவர்கள் என சொல்ல . ரியோவும் அவரது நிபந்தனைகளை ஏற்று காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் வர்டிகாவின் மாலை 6 மணி நிபந்தனை ரியோவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த அவர் எங்கே செல்கிறார் ஏன் இந்த கட்டுப்பாடு என குழப்பத்தில் இருக்கும் ரியோ மாலை 6 மணி ரகசியத்தை தெரிந்துக் கொள்ள வர்டிகாவின் வீட்டிற்க்கு சென்றபோது வர்டிகா குடும்பத்தின் உண்மை நிலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் .

இறுதியில் நாயகி வர்டிகா மாலை 6 மணிக்கு மேல் ரியோவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அவரை தவிப்பதற்கான காரணம் என்ன ? வர்டிகா குடும்பத்தின் உண்மை நிலை என்ன ?

ரியோ- வர்டிகா இருவரின் காதல் திருமணத்தில் முடிந்ததா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் படம்தான் ‘ராம் அன்ட் லீலா’.

நாயகனாக நடித்திருக்கும் ரியோ இயல்பான நடிப்பில் உடல் மொழியில் காதல் , காமெடி , அப்பாவித்தனம் , காதலுக்காக ஏங்குவது, எதிர்பார்க்காத பிரச்சனைக்காக போராடுவது என கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை வர்டிகா அழுத்தமான கதாபாத்திரத்தில் அழகாக அளவான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஷ், தங்கையாக நடித்திருக்கும் தாஃபியா அபு, மாமனாக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நண்பராக நடித்திருக்கும் பாலாஜி தியாகராஜன் தயாளன், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா வெங்கட், மாமனாக நடித்திருக்கும் மா கா பா, தாத்தாவாக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

அன்கிட் மேனனின் இசையும் , ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.

இயல்பான காதலை மையமாக கொண்ட கதையுடன் சுவாரஸ்யமான நாயகியின் குடும்ப பிரச்சனையுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி காமெடி கலந்த படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன்.

மொத்தத்தில், ’ராம் அன்ட் லீலா’ புதுமையான காதல்

ரேட்டிங் - 3.2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: