MediaTalks Logo
Header Advertisement
reviews
22 August 2026 at 12:19•1 Views

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

எம்  எஸ் பாஸ்கர் - கீதா கைலாசத்தின் மகனான துபாயில் பணிபுரியும் நாயகன் இளன் அந்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு வருகிறார் .

எம்  எஸ் பாஸ்கர் இளனுக்கு திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு வரும் என்கிற எண்ணத்தில் அவருக்கு  திருமணம் செய்து வைக்க  முடிவு செய்யும் நிலையில் குடும்பத்தினர் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள்.

திருமணத்திற்காக பெண் பார்க்கும் சந்திப்பில்  ஒரு காபி ஷாப்பில் சமூக வலைதளங்களில் பிரபலமான சான்வி மேக்னாவை  இளன் சந்திக்கிறார்.

கண்டதும்  சான்வி மேக்னாவின் அழகில் மயங்கி அவர் மீது காதல் கொள்கிறார் இளன்.

ஆனால், அங்கு ஏற்பட்ட குழப்பத்தில் அந்த சந்திப்பு வேறு விதமாக மாறி  சான்வி மேக்னாவின் சமூக வலைதளத்தில்  இளன் பார்வையாளர்கள் மத்தியில்  மாட்டிக் கொள்கிறார்.

சில நாட்களுக்கு பின் இளனின் காதலை சான்வி மேக்னா ஏற்றுக் கொள்ள இருவருக்கும் இடையே காதல் உருவாகி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.

இருவரது பெற்றோர்களின் சம்மதத்துடன்   இளன்-சான்வி மேக்னா திருமணம் நடைபெறுகிறது .

இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு -சான்வி மேக்னா தன் தாயான ராதிகா சரத்குமாரை பிரிந்து கணவர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பயந்து திருமண மண்டபத்தை விட்டு ஒடி தன் வீ ட்டிற்கே சென்று விடுகிறார்

இச் சுழலில் சான்வி மேக்னா பிடிவாதத்தினால் இளன் மனைவியின் வீட்டிலேயே தங்கி வாழ முடிவு செய்கிறார்.

அதன் பின் இளனுக்கு எதிர்ப்பார்த்த வேலை எதுவும் கிடைக்காததால் புகுந்த வீட்டிற்க்கு செல்லும் மருமகளை போல மருமகனாய் வீட்டோடு மாப்பிள்ளையாக  பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வேலைகள் அனைத்தையும் இளன் செய்கிறார் .

ஒரு கட்டத்தில் சான்வி மேக்னாவின் திடீரென வரும் கீதா கைலாசம் தன் மகனின் நிலையை பார்த்த அதிர்ச்சியில் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் .

இறுதியில் எதிர்ப்பார்க்கும் வேலை கிடைத்து இளன் வீட்டோடு மாப்பிள்ளையாக இல்லாமல் சான்வி மேக்னாவுடன் தான் வாழ்ந்த வீட்டிற்க்கு திரும்பினாரா ?  இல்லையா ? என்பதே ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் மீதி கதை .

படத்தின் இயக்குனராக இருந்து நாயகனாக நடித்திருக்கும் இளன்  இயல்பான நடிப்பில் உடல் மொழியில் காதல் , காமெடி , அப்பாவித்தனம் ,  தன் குடும்பத்திற்காக ஏங்குவது, உருக்கம் என கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா கனமான கதாபாத்திரத்தில் கவர்ச்சியுடன் அழகான நடிப்பில்  ரசிகர்களை கவர்கிறார் .

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும்,எம்  எஸ் பாஸ்கர்  அம்மாவாக நடித்திருக்கும்- கீதா கைலாசம்,ராதிகா சரத்குமார்,யோகி பாபு ,செந்தில்,இளங்கோ குமரவேல்,மாறன்,டீப்ஸ்,"ராஜா ராணி" பாண்டியன் ,ராஜாமணி,மோகன பிரியா ,ஆருஷ் என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

யுவன் சங்கர் ராஜா இசையும் , ஒளிப்பதிவாளர்  தினேஷ் கே பாபு ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.

இயல்பான காதலை மையமாக கொண்ட கதையுடன்  வீட்டோடு மாப்பிள்ளையின்  குடும்ப பிரச்சனைகளை ரசிக்கும்படி சொல்வதுடன்  விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி காமெடி கலந்த குடும்ப படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் இளன்

.மொத்தத்தில்  ‘பியார் பிரேமா கல்யாணம்’  ரசிக்கும்படியான படைப்பு

ரேட்டிங் -  3 .2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: