top of page

‘இருமுடி கட்டு’ - விமர்சனம்

mediatalks001
Aug 23
2 min read

ஆத்தூர் கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்த நாயகன் ரவி தேஜா வாழைப்பழ வியாபாரம் செய்து மனைவி பிரியா பவானி சங்கர் தன் மகளான நக்‌ஷத்ராவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் .


ஆத்தூரில் வாழும் பெண்களை ரவுடிகள் வம்பிழுத்தாலும் கிண்டல் செய்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்யும் ஐயப்பன் சாமியின் தீவிர பக்தரான ரவி தேஜா குழந்தைக்காக ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு வேண்டிய பிறகு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த ரவி தேஜா-பிரியா பவானி சங்கர் தம்பதிக்கு மகளான நக்‌ஷத்ரா பிறந்ததால் அளவுக்கு அதிகமான அன்புடன் தன் மகள்தான் தனது வாழ்க்கை என கண் எதிரே எந்த அட்டுழியம் நடந்தாலும் அப்பாவிடம் சொல்ல வேண்டும் சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்கிறார்


அதே நேரத்தில் மது பழக்கம் உள்ளவரான ரவி தேஜா, ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போட்டு கடுமையாக விரதம் இருக்கிறார்.


இந்நிலையில் உறவினரான சாய் குமார் மகள் படிக்கும் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் மர்மமான முறையில் இறக்கிறார்.


இச் சுழலில் அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியை சுவாசிகா தன் வகுப்பில் படிக்கும் சிறந்த மாணவிகளை தேர்வு செய்து பள்ளி முடிந்த பிறகு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.


மர்மமான முறையில் இறந்து போன மாணவியை தொடர்ந்து மற்றொரு மாணவி திடீரென்று படிப்பை பாதியில் விட்டுவிட்டு தலைமறைவாகிறார்.


பள்ளி படிப்பை நிறுத்திய மாணவி சிறப்பு வகுப்பு என்ற பெயரில் படிக்கும் மாணவிகளை ஆசிரியை சுவாசிகா அரங்கேற்றும் பாலியல் வன்கொடுமையை ரவி தேஜா மகளான நக்‌ஷத்ராவிடம் அதிர்ச்சியுடன் விவரிக்க … ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் ரவி தேஜாவிடம் மற்ற மாணவிகளை காப்பாற்ற ஆசிரியை சுவாசிகா செய்யும் கொடுமைகளை சொல்ல காத்திருக்கும் நேரத்தில் சிறுமியான நக்‌ஷத்ரா பூப் பெய்து விடுகிறாள் .


ஐயப்பனுக்கு மாலை போட்டு ரவி தேஜா விரதம் இருப்பதால் பூப் பெய்து இருக்கும் நக்‌ஷத்ரா அவரை பார்த்து பேசுவதற்கு பிரியா பவானி சங்கர் அன்புடன் தவிர்க்கிறார் .


ஓரிரு நாட்களுக்கு பின் தந்தையை பார்த்து இந்த கொடுமைகளை சொல்ல வேண்டும் என நக்‌ஷத்ரா போராடும் நேரத்தில் மர்ம நபரால் ஒரு புதருக்குள் மர்மான முறையில் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கிறார் .


இறுதியில் புதருக்குள் மர்மான முறையில் கொல்லப்பட்டு கிடந்த நக்‌ஷத்ராவை கொன்ற கொலையாளி யார் ? மாணவிகளுக்கு ஆசிரியை சுவாசிகா செய்த கொடுமைகளை ரவி தேஜா தெரிந்து கொண்டது எப்படி ? ஆத்தூர் கிராமத்தில் வாழும் பெண்களை வம்பிழுத்தாலே அடிதடியில் களம் இறங்கும் ரவி தேஜா மாணவிகளை காப்பாற்றி தன் மகளை கொன்றவனை பழி தீர்த்தாரா? இல்லையா ? என்பதை உணர்வுபூர்வமாக சொல்லும் படம்தான் ‘இருமுடி கட்டு’.


நாயகனாக நடித்திருக்கும் ரவி தேஜா குடும்ப தலைவனாக , மகள் மீதான அதிக பாசம் , மனைவி மீது கொண்ட அன்பு , பெண்களுக்கு பிரச்சனை என்றால் அதிரடியாய் மாறுவது என அனைத்து காட்சிகளிலும் நாயகனாய் உணர்வுபூர்வமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


ரவி தேஜாவின் மனைவியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் கதைகேற்றபடி சிறப்பாக நடிக்கிறார் .


ரவி தேஜாவின் மகளாக நடித்திருக்கும் சிறுமி நக்‌ஷத்ரா திறமையான நடிப்பின் மூலம் அழகான உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி பாராட்டும்படியான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .


இவர்களுடன் சாய் குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா, மீசாலா லஷ்மண், ரமணா பார்கவ் ,ராஜ்குமார் காசிரெட்டி, கிஷோர் காஞ்சிரபளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்ர் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில். பாடல்களுடன் பின்னணியும் ,ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


அழகான குடும்ப பின்னணியுடன் தந்தை - மகள் பாச பிணைப்பை மையமாக கொண்ட கதையுடன் விறு விறுப்பான திரைக்கதையில் ஆக்ஷன் ,சமூக விழிப்புணர்வு , சஸ்பென்ஸ், திரில்லிங் , செண்டிமெண்ட் என அனைத்தும் அழுத்தமாக கதையோடு பயணிக்கும்படி ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கி பரப்பான படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா நிர்வாணா .


மொத்தத்தில், ‘இருமுடி கட்டு’ பக்திமயமான அதிரடி ஆக்ஷன்


ரேட்டிங் - 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page