MediaTalks Logo
Header Advertisement
reviews
23 August 2026 at 22:55•1 Views

‘ஒன் மேன்’ (ONE MAN) - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘ஒன் மேன்’ (ONE MAN) - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

உலகிலேயே சினிமா திரையுலகின் முதல் முறையாக அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் தானே நடித்து தொழில்நுட்பத் துறையில் படத்தின் பின்னணி வேலைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தானே செய்து, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என்று ஒரு முழுநீளப் பட்டியலுடன் ஒரு முழுப்படத்தையும் தனி மனிதராக உருவாக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.

நான்கு நண்பர்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஒருவர் என ஐந்து பேர் கொண்ட குழுவின் பயணத்தில் கதை ஆரம்பித்து மனிதனின் பேராசையால் ஒரு உயிரினம் கூட இல்லாமல் உலகம் அழிந்துவிடும் என ஒரு கண்டுபிடிப்பின் ரகசியம் தெரிய வருகிறது.

அதை பயன்படுத்தி 10 நாட்கள் உலகையே ஆள வேண்டும் என்று ஆசைப்படும் நான்கு நண்பர்களின் ஆசை நிறைவேறியதா ?, யாரும் இல்லாத உலகில் தனி ஆளாக வாழ துடிக்கும் நாயகனின் ஆசையின் பின்னணியில் பேராபத்து இருப்பதை விவரிப்பது தான் ‘ஒன் மேன்’ படத்தின் கதை.

உலகையே வியப்பில் ஆழ்த்தும் இவரது சாதனையை பாராட்டும் விதத்தில் இப்படத்தை தனி மனிதராக உருவாக்கியிருக்கும் சங்ககிரி ராஜ்குமார், அதற்கான கதைக்களம் மற்றும் காட்சிகளை கையாண்ட விதம் பிரமிக்க வைக்கிறது.

கார் சேசிங், ஹெலிகாப்டர் சாகசம், ரயில் சாகசம், விமானப் பயணம் என்று பல்வேறு பிரமாண்டமான காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் மேற்கொண்டிருந்தாலும், அதற்கான பின்னணியில் தனி ஒருவராக மிக கடுமையான உழைப்பை கொடுத்திருப்பது திரையில் உண்மையாக தெரிகிறது.

இப்படி ஒரு முயற்சியில் தனி மனிதராக செயல்படுத்தியிருக்கும் சங்ககிரி ராஜ்குமார், அதற்கான சாதனங்களை தானே உருவாக்கி, அதன் மூலம் காட்சிகளை படமாக்கிய விதம், படத்தில் இடம்பெறும் கூட்டம் நிறைந்த திரையரங்க காட்சியில் கூட தான் மட்டுமே பலவிதமான கெட்டப்புகளில் நடித்தது, வனப்பகுதியில் படமாக்கப்பட்ட கூட்டம் நிறைந்த காட்சி என்று அனைத்தையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் கையாண்டு பாராட்டை பெறுகிறார் சங்ககிரி ராஜ்குமார்.

.

மொத்தத்தில், ‘ஒன் மேன்’ இந்திய திரையுலகம கொண்டாட வேண்டிய சாதனை மனிதன்

ரேட்டிங் - 4.5 \ 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: