MediaTalks Logo
Header Advertisement
reviews
27 August 2026 at 22:22•1 Views

'அமரம்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
'அமரம்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

கூலிக்கு கொலை செய்யும் நாயகன் ராஜன் தேஜஸ்வர் கிழக்குத் தொடர்ச்சி மலையை சார்ந்த கல்வராயன் மலை அடி வார கிராமத்தில் தன் மாமனான ஜார்ஜ் ஆதரவுடன் வாழ்ந்து வருகிறார்.

பழங்குடி மக்களை கூலிப்படையாக பயன்படுத்தும் கூலிப்படை தலைவனான சாய் தீனா நாயகன் ராஜன் தேஜஸ்வரை கொலை செய்வது போன்ற தவறான வேலைகளுக்கு குறைந்த கூலி கொடுத்து தனக்கு பயன்படுத்திக் கொள்கிறார்

இந்நிலையில் பணத்திற்காக கொலை செய்யும் நாயகன் ராஜன் தேஜஸ்வர், நாயகி ஐரா அகர்வாலின் தந்தையான சுரேஷ் மேனனை அவர் கண் முன்னே கொலை செய்கிறார்.

முகத்தில் துணியை கட்டி கொண்டு தனது தந்தை சுரேஷ் மேனனை கொலை செய்தவரை கொன்று பழி தீர்க்க முடிவு செய்யும் நாயகி ஐரா அகர்வால், கொலையாளியை தேடி செல்ல முயற்சிக்கிறார்.

இச் சுழலில் எம்.எல்.ஏவான நாகிநீடு ஐரா அகர்வாலுக்கு உதவ முன் வருகிறார்.

நாகிநீடு தன் அடியாட்களுடன் ராஜன் தேஜஸ்வர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க,, ஐரா அகர்வாலும் கொலை வெறியோடு நெருங்கும்போது மனம் மாறி அவரை கொலை செய்யும் முடிவை கைவிட்டு விடுகிறார்.

இதனால், எம்.எல்.ஏ நாகிநீடு மற்றும் காதலனான அவரது மகனால் ஐரா அகர்வாலுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் அந்த ஆபத்தில் இருந்து அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார் ராஜன் தேஜஸ்வர்.

இறுதியில் எம்.எல்.ஏ நாகிநீடுவிடமிருந்து நாயகி ஐரா அகர்வாலை நாயகன் ராஜன் தேஜஸ்வர் காப்பாற்றினாரா ? முடிவில் நாயகன் ராஜன் தேஜஸ்வரின் நிலை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் 'அமரம்’.

நாயகனாக நடித்திருக்கும் ராஜன் தேஜஸ்வர் அறிமுக நாயகனாக அழுத்தமான கதாபாத்திரத்தில் அமைதியான உடல் மொழியில் கதையுடன் இணைந்து கண்களாலேயே பல உணர்வுகளை வெளிப்படுத்தி, ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

நாயகியாக நடித்திருக்கும் ஐரா அகர்வால் கதைகேற்றபடி இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .

ஜார்ஜ் மரியான், சாய் தீனா, எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

ஒளிப்பதிவாளர் பரத் குமார் ஒளிப்பதிவும், மிக்கி ஜெ .மேயர் இசையும் படத்திற்கு பக்க பலம் .

பணத்திற்காக கொலை செய்யும் நாயகனின் கதையை மையமாக வைத்து கிழக்குத் தொடர்ச்சி மலை வாழ் மக்களின் இயல்பான வாழ்வியல் பின்னணியுடன் சுவாரஸ்யமான விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் வித்தியாசமான கதை களத்துடன் அனைவரும் ரசிக்கும்படி ஆக்ஷன் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா

மொத்தத்தில் ‘அமரம்’ பார்வையாளர்களை கவரும் படைப்பு

ரேட்டிங் 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: