top of page

‘ஹை’ (Hi) - விமர்சனம்

  • mediatalks001
  • 12 hours ago
  • 2 min read


கே.பாக்யராஜ்- ராதிகா சரத்குமார் தம்பதிகளின் மகனான நாயகன் கவின் தனது மாமன் மகளான காவியா அறிவுமணியை காதலிக்கிறார்.


கவினின் காதலை காவியா அறிவுமணி ஏற்றுக்கொள்ள மறுப்பதால் தனது பெற்றோர் போல் காதல் திருமணம் தான் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் கவின் தன் காதல் கை கூடாததால் காதலித்துதான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்கிற உறுதியுடன் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.


இந்நிலையில் சிறு வயதில் குடும்ப பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறிய அம்மாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் தந்தையான பிரபுவின் வளர்ப்பில் வளரும் நாயகி நயன்தாராவுக்கு உறவினர் மகனுடன் திருமண ஏற்பாடு நடக்க, அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.


இச் சுழலில் வீட்டை விட்டு ஓடி வந்த நயன்தாராவும், கவினும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

நயன்தாராவின் இயல்பான குணத்தில் கவின் தன் காதலி என்றுமே இவர்தான் என நினைத்து அவரை காதலிக்க தொடங்குகிறார்.


ஆனால், நயன்தாரா காதல், கல்யாணம் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்த, கவின் தன் காதலை சொல்லாமல் மறைத்து விடுகிறார்.


இந்நிலையில் இருவரது உறவினர்கள் கவின் - நயன்தாரா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து திருமணத்திற்காக வலுகட்டாயமாக நயன்தாராவை அழைத்து செல்ல முயற்சிக்கும்போது கவின் அனைவரது முன்னிலையில் தான் காதலிக்கும் பெண் நயன்தாரா எனவும் தன்னால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என பொய் சொல்கிறார் .


இதனால் கவினும், நயன்தாராவும் கணவன் – மனைவியாக சில மாதங்கள் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.


இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி நயன்தாராவை தன் காதல் வலையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார் கவின்.


இறுதியில் கவினின் காதல் வலையில் நயன்தாரா சிக்கினாரா ? கவினின் மனதை புரிந்து கொண்டு நயன்தாரா அவரை திருமணம் செய்து கொண்டாரா ? என்பதுதான் ‘ஹை’.


கோவை தமிழ் பேசும் நாயகனாக நடித்திருக்கும் கவின், காதல், ஏக்கம் , தவிப்பு, ஏமாற்றம் என இயல்பான நடிப்பில் ரசிக்க வைத்திருப்பதுடன் , காமெடி கலந்த நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்


கிராமத்து பெண்ணாக நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா அனுபவ நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார்


கவினின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாசரத்குமார் , அப்பாவாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுஹாசினி மணிரத்னம் மற்றும் சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ,அம்ருதா சீனிவாசன் ,Vtv கணேஷ் ,ஃபெப்சி விஜயன் - ரெஞ்சி பணிக்கர்,காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவும் , ஜென் மார்ட்டின் இசையும் படத்திற்கு பக்க பலம் .


காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கும் நாயகனின் கதையை மையமாக வைத்து ஆரம்பம் முதல் இறுதி வரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் இயல்பான காதலின் வாழ்வியலுடன் அனைவரும் ரசிக்கும்விதமாக நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் விஷ்ணு எடவன்



மொத்தத்தில் ‘ஹை’ குடும்பத்துடன் ரசிக்கும் படம்


ரேட்டிங் 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page