‘ஒன்ஸ்மோர்’ - விமர்சனம்
- mediatalks001
- 13 hours ago
- 2 min read

கல்லூரி படிப்பை முடித்து விட்டு கட்டிட கலைஞராக பணிபுரியும் நாயகன் அர்ஜுன் தாஸ் அமைதியாக எப்பொழுதும் மன இறுக்கத்துடன் விரக்தியோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் .
இந்நிலையில் ஒரு நாள் தனது வண்டி பழுதானவுடன் பஸ் ஸ்டாப்பில் அர்ஜுன் தாஸ் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவர் படித்த கல்லூரியில் ஜூனியரான அதிதி சங்கர் எட்டு வருடங்களுக்கு பிறகு சந்திக்க ,,,, தனது காரில் அர்ஜுன் தாஸை ஏற்றிக் கொண்டு அர்ஜுன் தாஸ் செல்லும் இடத்தில் இறக்கி விடுகிறார் .
கண்டதும் காதலாக அர்ஜுன் தாஸை அதிதி சங்கர் காதலிக்கிறார்.
ஆரம்பத்தில் விடாப்பிடியாக அர்ஜுன் தாஸை துரத்தி காதலிக்கும் அதிதி சங்கரின் காதலை முதலில் காதலை ஏற்க மறுத்தாலும் அதிதியின் தீவிர முயற்சியினால் அர்ஜுன் தாஸ் மனம் மாறி, காதலிக்க தொடங்குகிறார்
பெரியவர்கள் நிச்சயித்தபடி இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது.
திருமண விழாவின் இரவு பொழுதில் 8 வருடங்களுக்குப் பிறகு திடீரென போனில் தொடர்புக் கொண்டு அர்ஜுன் தாஸின் முன்னாள் காதலி சோனா ஒலிக்கல் சந்திக்க வேண்டும், என்று சொல்கிறார்.
காதல் தோல்வியால் தன் இறுக்கமான மன நிலைக்கு காரணமான முன்னாள் காதலி சோனா ஒலிக்கல் சந்திக்க குழப்பத்துடன் செல்கிறார் அர்ஜுன் தாஸ்.
இறுதியில் அர்ஜுன் தாஸ் முன்னாள் காதலி சோனா ஒலிக்கலை சந்தித்தாரா ?
இருவரது காதல் தோல்வியடைந்து இருவரும் பிரிவதற்கான காரணம் என்ன ?
முடிவில் அர்ஜுன் தாஸுக்கும் -அதிதி சங்கருக்கும் திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஒன்ஸ்மோர்’.
நாயகனாக நடிக்கும் அர்ஜுன் தாஸ் அமைதியான முகத்தில் வழக்கமான பாணியில் தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார் ..
நாயகி அதிதி சங்கர் துறு துறு நடிப்பில் நாயகனை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரத்தை இயல்பாக நடிப்பில் கையாண்டு திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சோனா ஒலிக்கலின் கதாபாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்கும்படி அமைந்தாலும் அழுத்தமில்லாத திரைக்கதையினால் கதைகேற்றபடி நடிக்கிறார் .
டிராவிட் செல்வம்,அனுஷா பிரபு, ஜகபர்,மோனிஷ் எலமாரன்,
வர்ணிகா வரத்,பிலிப்சன் தாமஸ், அருண்குமார் மணி, சௌந்தர்யா மனோகரன்,கண்ணன் டி,ரிச்சிரிச்சர்ட்சன் ,ரக்ஷா செரின், ஸ்ரீகாந்த், நியாஸ் முஹம்மது ,சித்ரா லட்சுமணன், தேவதர்ஷினி சேதன்
ஜென்சன் திவாகர்,தயாளன், மகேஸ்வர், ரமா ராஜேந்திரா, லட்சுமி சரவணன் ,சுதர்சன் காந்தி ,ஆரீஷ்,குட்நைட் ஆர். நாகராஜன்,ரித்திக் கிருஷ்ணா ,பூஜா சுரேந்தர் ,நிர்மல் குமார்,அபிரா பிரவீன், ஹரிகுமார்,சோமசூர்யா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் ..
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகம் . பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .
காதலில் தோல்வியடைந்த நாயகனின் கதையை மையமாக கொண்டு ஆரம்பத்தில் சுவாரஸ்யம் கலந்த விறு விறுப்பாக கதை நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நாயகனின் கல்லூரி காதல், காதல் தோல்வி , பிரிவு என வேறு விதமாக பயணிக்கும் கதையுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்
மொத்தத்தில், ‘ஒன்ஸ்மோர்’ பலவீனமான காதல்
ரேட்டிங் - 2.5 / 5





Comments