top of page

' 7 ஸ்டார் பாய்ஸ்' - விமர்சனம்

  • mediatalks001
  • 22 hours ago
  • 2 min read

ஆத்தங்கரை கிராமத்தில் வாழும் பெரியவர்கள் முதல் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் வரை கால்பந்து விளையாட்டின் மேல் கொண்ட அதிக ஆர்வத்தில்

கிராம மக்கள் அனைவரும் எந்த நாட்டின் அணிகளும் கால்பந்து விளையாடினாலும் கால்பந்து விளையாட்டின் உலக சாம்பியன் ஆன பீலேவின் ரசிகனான டி ஜி ரவியின் தலைமையில் அம் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி டிவியில் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியாக விளையாட்டினை கண்டு ரசிக்கின்றனர்.


அதே கிராமத்தில் கால்பந்து உலக கோப்பைக்காக விளையாடிய கால்பந்து வீரர் விஜயன் வாழ்ந்து வருகிறார்


மற்றொரு பக்கம் கால்பந்து விளையாடும் வீரரான நாயகன் ஆண்டனி வர்கீஸ் கிராம பெரும்புள்ளியான ராவுத்தர் வீட்டில் தன் காதலியை பார்க்க யாருக்கும் தெரியாமல் தன் சகாக்களுடன் வீட்டிற்குள் நுழைய வீட்டில் உள்ளவர்கள் அவரை திருடன் என நினைத்து போலீஸில் ஒப்படைக்கின்றனர்.


இச்சூழலில் ஆண்டனி வர்கீஸின் செயலினால் தமிழக கால்பந்து நிர்வாக மேலிடம் அவரை இடை நீக்கம் செய்கிறது


இந்நிலையில் உலக சாம்பியனான கால்பந்து வீரர் மெஸ்ஸியின் மேல் அதிக பற்று கொண்ட பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் அமல் , தனிஷ் உட்பட ஏழு பேர் கால்பந்து விளையாட எந்த மைதானத்திற்கு சென்றாலும் அங்கு விளையாடுபவர்கள் விரட்டுவதால் விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் திண்டாடுகின்றனர்.


ஒரு கட்டத்தில் காலியான இடம் கிடைத்தவுடன் சிறுவர்கள் அனைவரும் அந்த இடத்தில் கால்பந்து விளையாட முடிவு எடுக்கும் நிலையில் தனிஷ் ஏழு பேர் கொண்ட தன் குழுவுக்கு 7 ஸ்டார் பாய்ஸ் குரூப் என்று பெயர் வைக்கிறான்



இந்நேரத்தில் சிறுவர்களின் ஆர்வத்தை பார்க்கும் ஆண்டனி வர்கீஸ் அந்த கிராமத்தில் நடைபெறும் அனைத்து அணிகளும் கலந்து கொள்ளும் கால்பந்து விளையாட்டு போட்டியில் திறமையாக விளையாடுவதற்கு சிறுவர்களுக்கு பயிற்சி தர கால்பந்து வீரர் ஐ. எம். விஜயனை சந்திக்கிறார்


இந்நிலையில் சிறுவர்களின் ஆர்வத்தை பார்த்த ஐ. எம். விஜயன் அவர்களுக்கு திறமையாக பயிற்சி அளித்து அந்த கிராமத்தில் நடைபெறும் கால்பந்து விளையாட்டு போட்டியில் ஆத்தங்கரை 7 ஸ்டார் பாய்ஸ்அணி என்ற பெயரோடு அந்தப் போட்டியில் கலந்து கொள்ள செய்கிறார்


இறுதியில் 7 ஸ்டார் பாய்ஸ் அணி சிறுவர்கள் அனைத்து அணிகளுடன் திறமையாக விளையாடி இறுதிச் சுற்றில் கோப்பையை கைப்பற்றினார்களா ? இல்லையா?


7 ஸ்டார் பாய்ஸ் அணியில் ஆட்ட நாயகனாக யாரை தேர்ந்தெடுத்தார்கள் ? என்பதுதான் '7 ஸ்டார் பாய்ஸ்' படத்தின் மீதி கதை.


நாயகனாக நாயகன் ஆண்டனி வர்கீஸ் இயல்பான நடிப்பில் காதல் , தவிப்பு , சிறுவர்களுடன் பாசத்துடன் பழகுவது என உடல் மொழியில் உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .

நாயகியாக நடிக்கும் ஜுமானா அப்து ரஹ்மான் அதிகமான வசனங்கள் இல்லா விட்டாலும் பார்வையாலேயே ரசிகர்களை கவர்கிறார் .


நடிகராக இல்லாமல் உலக கோப்பைக்காக விளையாடிய கால்பந்து வீரராக ஐ. எம். விஜயன் நடிக்கிறார்


7 ஸ்டார் பாய்ஸ் அணியின் சிறுவர்களில் உமராக நடிக்கும் தனிஷ் பி.கே அனைத்து காட்சிகளிலும் அழகான உணர்வுகளுடன் பாராட்டும்படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளான்.


லுக்மான் அவரான், பாலு வர்க்கீஸ், அமல் ,பாசித் ,நிஷாந்த் சாகர் ,டி ஜி ரவி என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையும் , ஒளிப்பதிவாளர் பயாஸ் சித்திக் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .



கால் பந்து விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கிராம மக்களின் கதையை மையமாக வைத்து உலக சாம்பியனான கால்பந்து வீரர் மெஸ்ஸியின் மேல் அதிக பற்று கொண்ட பள்ளியில் படிக்கும் சிறுவர்களின் கதையுடன் , மென்மையான காதலை கலந்து விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும்படி விளையாட்டை மையமாக கொண்ட படங்களில் சிறந்த படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நிகில்பிரேம்ராஜ் .


மொத்தத்தில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ ரசிக்க வைக்கும் சிறந்த படைப்பு


ரேட்டிங் - 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page