top of page

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 20 hours ago
  • 2 min read

முப்பது வயதை தாண்டிய நாயகன் நிவின் பாலி இறந்து போன தன் காதலி நினைவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வீட்டின் அருகே இருப்பவர்களிடம் சகஜமாக பழகிக் கொண்டு அனைவரிடத்திலும் அன்பாக இருக்கிறார் .


இந்நிலையில் இவரது பக்கத்து வீட்டில் கல்லுரி மாணவியான மமிதா பைஜு தனது குடும்பத்துடன் குடியேறுகிறார்.


நிவின் பாலியின் தம்பி சங்கீத் பிரதாப் தனது காதலி நாயகியாக நடிக்க ஷார்ட் பிலிம் ஒன்றை எடுத்து கொண்டிருக்கிறார் .


ஒரு கட்டத்தில் வீட்டின் அருகே குடியிருக்கும் நிவின் பாலியிடம் தனது கணினியை பழுது பார்க்க கொடுக்கும் மமிதா பைஜுடம் பழுது பார்த்து விட்டு காசு வாங்க மறுக்கிறார் நிவின் பாலி .


இச் சுழலில் நிவின் பாலியின் இயல்பான குணமும் , மற்றவர்கள் அவரிடம் அன்பாக பழகுவதை பார்க்கும் மமிதா பைஜு ஆரம்பத்தில் நட்பாக பழக, பின்பு இருவர் மனதிலும் காதல் மலர்கிறது.


இருவரது காதலை தெரிந்து கொள்ளும் மமிதா பைஜுவின் குடும்பத்தினர் வயது அதிகமான நிவின் பாலியை மமிதா பைஜு காதலிப்பதால் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .


நிவின் பாலியின் காதலை நிராகரித்து வெளி நாடு செல்லும் மமிதா பைஜு ஒரு திருமணத்திற்காக திரும்பி வர அங்கு நிவின் பாலியை சந்திக்கிறார் .


இறுதியில் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி மமிதா பைஜு நிவின் பாலியுடன் மீண்டும் இணைந்தாரா ? இல்லையா ? என்பதுதான் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் மீதி கதை .


நாயகனாக நடித்திருக்கும் நிவின் பாலி தன் கதாபாத்திரத்துடன் இணைந்து காதல் , தவிப்பு , உருக்கம் என பல உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இயல்பான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .


நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு இளமை துள்ளும் நடிப்பில் தனக்கும் காதலனுக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்றாலும், அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இயல்பான காதலை அவர் வெளிப்படுத்தும் விதம் ரசிக்க வைக்கிறது.


நிவின் பாலியின் தம்பியாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் என அனைத்து நடிகர்களும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


விஷ்ணு விஜய் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


வயது வித்தியாசம் கொண்ட நாயகனை காதலிக்கும் நாயகியின் கதையை மையமாக வைத்து இயல்பான காதல் உணர்வுகளுடன் , மென்மையான மனதை தொடும் காதலுடன் பார்வையாளர்கள் சிரித்து மகிழும்படியான காட்சிகளுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் புதுமையான கதைக்களத்தில் அனைவரும் ரசிக்கும் விதமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கிரிஷ் A D


மொத்தத்தில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ நகைச் சுவையுடன் ரசிக்க வைக்கும் குடும்ப படம்


ரேட்டிங்- 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page