top of page

‘4 இடியட்ஸ்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 4 hours ago
  • 1 min read

டாக்டரான வின்சென்ட் அசோகனுக்கு E C R கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல் தெரிந்தவுடன் அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடும் நான்கு திருடர்களான புகழ், கும்கி அஸ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் பங்களாவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது, வின்சென்ட் அசோகனின் அடியாளான அந்த பங்களாவின் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.


இந்நிலையில் பங்களாவில் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்ட நான்கு திருடர்களுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை ரவி மரியா போட, அதற்கு நான்கு பேரும் சம்மதிக்கிறார்கள்.


இதற்கிடையே எதற்காக நாம் இங்கே சிக்கி கொண்டுள்ளோம் என்கிற உண்மை தெரியும் போது அந்த கடற்கரை பங்களாவின் உரிமையாளரான மருத்துவர் வின்சென்ட் அசோகனை பற்றியும், காவலாளி ரவி மரியாவை பற்றியும் மேலும் சில தகவல்கள் தெரிய வர அதிர்ச்சியில் உறைந்து போகும் அந்த நான்கு திருடர்களும் தங்களுக்கு தெரிந்தது போல் எதையும் காட்டிக்கொள்ளாமல்அந்த பங்களாவை விட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.


நான்கு பெறும் தங்களின் முயற்சியில் அந்த பங்களாவை விட்டு வெற்றிகரமாக தப்பித்தார்கள ?, பங்களாவின் உரிமையாளரான வின்சென்ட் அசோகன் மற்றும் காவலாளி ரவிமரியாவின் மர்மம் நிறைந்த பின்னணி என்ன ? என்பதை விறு விறுப்பாகவும் நகைச்சுவையாகவும் சொல்லும் படம்தான் ‘4 இடியட்ஸ்’


கதையின் நாயகனாக நடித்திருக்கும் புகழ் கதையுடன் இணைந்து நடித்தாலும் காமெடிக்கு சம்பந்தம் இல்லாத வசனங்களால் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் காமெடி அவரிடம் இல்லாமல் போகிறது.


புகழின் நண்பர்களாக கும்கி அஸ்வின், திடியன், இந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .


ரவி மரியா. வின்சென்ட் அசோகன் தங்கள் கதாபாத்திரத்தை நடிப்பில் இயல்பான செய்துள்ளனர்


பிரக்யா நயனின் கவர்ச்சி பாடல் ரசிகர்களை ஆட வைக்கிறது


யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு,ம் சுபாஷ் முனிரத்னம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .


பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு வீட்டில் கொள்ளையடிக்க செல்லும் நான்கு பேரை மையமாக கொண்ட கதையுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் இறுதி சுவாரஸ்மாக கதையை நகர்த்தி கமர்ஷியல் மற்றும் காமெடி கலந்த படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன்


மொத்தத்தில் - ‘4 இடியட்ஸ்’ பார்க்கலாம்


ரேட்டிங் - 2.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page