top of page

‘தி கிராண்ட் மாஸ்டர்‘ - விமர்சனம்

mediatalks001
19 hours ago
2 min read

2013 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறும் கதையாக சென்னையில் தூய்மை பணியாளராக மிகவும் தாழ்த்தப்பட்டசமுகத்தைச் சார்ந்த கணவனை இழந்த அபர்ணதி பள்ளியில் படித்து கொண்டிருக்கும் சிறுவனான அஸ்வினுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .


இந்நிலையில் அபர்ணதியின் மகனான அஸ்வின் செஸ் விளையாட்டின் மேல் அதிக ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்லாமல் செஸ் அகாடமி சார்பில் அந்த விளையாட்டை பற்றி மாணவர்களுக்கு நடைபெறும் வகுப்பில் வெளியே இருந்து பார்த்துக் கொண்டு தானும் செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டின் சிறந்த வீரனான ஆனந்தை போல ஒரு கிராண்ட் மாஸ்டராக வரவேண்டும் என்று லட்சிய கனவுடன் இருக்கிறார்.


ஒரு கட்டத்தில் அஸ்வின் அபர்ணாதிக்கு தெரியாமல் உள்ளூரில் நடைபெறும் செஸ் போட்டியில் விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து அதற்கான சான்றிதழை பெறுகிறார் .


இச் சுழலில் செஸ் விளையாடுவது பிடிக்காத அபர்ணதி திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தைப் பிடித்து அஸ்வின் வாங்கிய சான்றிதழை கிழித்து எறிந்து இனிமேல் அந்த விளையாட்டை நீ விளையாடக்கூடாது என கண்டிப்பாக அபர்ணதி கூறும் நிலையில் கோபத்தில் அஸ்வின் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்


எங்கு தேடியும் தன் மகனை காணாமல் அபர்ணதி போலீசில் புகார் கொடுக்கும் நிலையில் போலீஸ் அஸ்வினை கண்டுபிடிக்கிறது.


இச்சூழலில் அஸ்வினின் விளையாட்டின் மேல் உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்ட அபர்ணதி இந்திய அளவில் செஸ் விளையாட்டு போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற கனவுடன் இருக்கும் அஸ்வினுக்கு அதற்கான பயிற்சியை தானே தருகிறார்.


இறுதியில் செஸ் விளையாட்டு போட்டிக்கான பயிற்சியை தரும் அபர்ணதி யார் ? அவரது பின்னணி என்ன ? என்ன காரணத்திற்காக செஸ் விளையாட்டை அபர்ணதி வெறுக்கிறார் ? அபர்ணதியின் திறமையான பயிற்சியினால் அஸ்வின் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றாரா ? என்கிற கேள்விகளுக்கு விடையளிக்கும் படம்தான் ‘தி கிராண்ட் மாஸ்டர் ‘


கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி மிகவும் தாழ்த்தப்பட்டசமுகத்தைச் சார்ந்த பெண்ணாக உடல் மொழியில் கதாபாத்திரத்துடன் இணைந்து அனைத்து உணர்வுகளையும் உள் வாங்கி காதல் ,பாசம் ,தவிப்பு ,உருக்கம் ,செண்டிமெண்ட் என உணர்வுபூர்வமான நடிப்புடன் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .


அபர்ணதி கணவனாக நடித்திருக்கும் லிங்கேஷ் திறமையான நடிப்பில் கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .


அபர்ணதியின் மகனாக நடித்துள்ள சிறுவன் அஸ்வின் தேர்ந்த நடிகனாக சிறப்பாக நடித்துள்ளான் .


வில்லனாக அமைதியான நடிப்பில் சுரேஷ் மேனன் , அன்பு ,தமிழரசி ,வெற்றி செழியன் மனோ மதுரை, விசித்திரன்,என நடித்த நடிகர்கள் தங்கள் பங்களிப்பை நடிப்பில் சிறப்பாக செய்துள்ளனர் .


இசையமைப்பாளர் தினேஷ் ஆண்டனியின் இசையும் ,ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவியுடன் ஞானசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


ஏழ்மை நிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டசமுகத்தைச் சார்ந்த பெண்ணுக்கும் அடக்கிஆள நினைக்கும் ,அதிகார வர்க்கத்திற்கும் நடக்கும் போராட்டத்தை மையமாக கொண்ட கதையுடன் விறு விறுப்பான திரைக் கதையில் எந்த காலத்திலும் விளையாட்டு போட்டிகளில் தாழ்த்தப்பட்ட சமுகம் சிரழிக்கப் படுவதை ஆழமாக சொல்வதுடன் அழுத்தமான கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும் விதமாக பாராட்டும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வெற்றி செழியன்.


மொத்தத்தில் - ‘தி கிராண்ட் மாஸ்டர்‘ தடைகளை வென்றவன்


ரேட்டிங் - 3.2 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page