‘லெனின் பாண்டியன்’ - விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசங்குளம் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் வயதான முதியவரான கங்கை அமரன் மற்றும் அவரது மனைவியான ரோஜா தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் அவர்கள் வீட்டில் வளர்த்து வரும் ஆடு மாடுகளை செல்லமாக ஒரு பெயர் சொல்லி அழைத்து மிகவும் பாசமாக வளர்த்து அன்புடன் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் டி சிவாவின் ஆதரவில் கிராமத்தில் அரசியல்வாதி ஆடுகளம் நரேனின் தலைமையில் யுகேந்திரன் சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்.
கிராம காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆன போஸ் வெங்கட் இந்த மணல் கொள்ளை கும்பலுக்கு உடந்தையாக செயல்படுகிறார்.
இதற்கிடையில் ஒரு இரவு நேரத்தில் கங்கை அமரன் வளர்க்கும் மீனாட்சி என்கிற பெயர் வைத்த பெண் ஆடு யுகேந்திரனின் மணல் லாரி மீது அடிபட்டு இறக்கிறது .
அதிர்ச்சியடையும் கங்கை அமரன் தன் மகளாக பாவித்த மீனாட்சி ஆடு லாரியில் அடிப்பட்டு இறந்ததை புகார் கொடுக்க காவல் நிலையம் செல்கிறார்.
புகாரை வாங்க மறுக்கும் காவல் அதிகாரி போஸ் வெங்கட் அனைவரது முன்னிலையிலும் கங்கை அமரனை அடித்து அவமானப்படுத்துகிறார் .
போலீசினால் அவமானப்படுத்தப்படும் கங்கை அமரன் இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் மணல் கொள்ளை கும்பலைப் பற்றி விஏஓ அர்ச்சனாவுக்கு தகவல் கொடுக்கிறார்
போலீசின் துணையுடன் விஏஓ அர்ச்சனா தீவிர நடவடிக்கையில் எடுத்து வரும் நேரத்தில் யுகேந்திரனின் ஆட்களால் கொல்லப்படுகிறார்.
விஏஓ அர்ச்சனாவின் கொலையை நேரில் பார்க்கும் கங்கை அமரன் இக் கொலை வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது நீதிபதி ஜார்ஜ் மரியன் முன்பு விஏஓ அர்ச்சனாவின் கொலையை நேரில் பார்த்த சாட்சியாக ஆஜராகிறார் .
நீதிபதி ஜார்ஜ் மரியன் வழக்கை விசாரிக்கும் நேரத்தில் அர்ச்சனாவின் கொலையை நேரில் பார்த்த சாட்சியாக யுகேந்திரனுக்கு எதிராகவும் , அதே நேரத்தில் யுகேந்திரனின் மணல் லாரியில் அடிபட்டு தன் ஆடு இறந்ததை போஸ் வெங்கட் புகார் வாங்க மறுத்து தன்னை அடித்து அவமானப்படுத்தியதை சொல்வதுடன் யுகேந்திரனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரி ஜார்ஜ் மரியனிடம் கண்ணிர் மல்க முறையிடுகிறார் .
இச் சுழலில் நீதிபதி ஜார்ஜ் மரியன் கங்கை அமரனுக்கு வழக்கு முடியும் வரை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க துப்பாக்கியுடன் போலீஸ் கான்ஸ்டபிள் தர்ஷன் கணேசனை நியமிக்கிறார்.
சில நாட்களுக்கு பின் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறாமல் இருக்க ஆடுகளம் நரேனும் யுகேந்திரனும் கங்கை அமரனை கொல்வதற்கு திட்டம் போடும் நிலையில் ஒரு கட்டத்தில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் தர்ஷன் கணேசனை அழைத்து கங்கை அமரனை விட்டு சென்று விடுமாறு மிரட்டல் விடுக்கின்றனர் .
இறுதியில் ஆடுகளம் நரேனும் யுகேந்திரனும் கங்கை அமரனை என்ன செய்தார்கள் ? யுகேந்திரனின் மிரட்டலுக்கு பயந்து கங்கை அமரனை விட்டு தர்ஷன் கணேசன் சென்றாரா ? முடிவில் தர்ஷன் கணேசன் செய்த அதிரடியான செயல் என்ன ? என்கிற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் படம்தான் ‘லெனின் பாண்டியன்’
கதையின் நாயகனாக கங்கை அமரனை பாடலாசிரியராக , இசையமைப்பாளராக ,இயக்குனராக அனைவரும் அறிந்த நிலையில் நடிகராக இப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் கங்கை அமரன் அவரது அனுபவத்தில் மிக சிறந்த நடிகராக சிறப்பான நடிப்பில் இயல்பான கிராம வாழ்வியலுடன் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் .
கங்கை அமரனின் மனைவியாக ரோஜா மண் மணம் மாறாத கிராமத்து பெண்ணாக நடிப்பில் கவர்கிறார் .
அறிமுக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் அறிமுக நடிகரை போல இல்லாமல் கவனத்துடன் காட்சிகளை கையாண்டு தேர்ந்த நடிகரை போல் நடித்திருப்பது பாராட்டுக்குரியது .
நாயகியாக ஸ்ரித்தா ராவ் , அர்ச்சனா ரவிச்சந்திரன் ,ஆடுகளம் நரேன் ,யுகேந்திரன் இவர்களுடன் நீதிபதியாக நடிக்கும் ஜார்ஜ் மரியனின் நடிப்பில் தியேட்டரில் வரும் விசில் சத்தத்துடன் படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம் . பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் .
ஒளிப்பதிவாளர் A M எட்வின் சகாய் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை காட்சிகளில் கண் முன் நிறுத்துகிறார் .
அனைத்து உயிர்களிடத்தில் அன்பை காட்டும் கருணை கொண்ட இயல்பான மனிதனின் கதையை மையமாக வைத்து நேர்த்தியான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறு விறுப்பான காட்சிகளுடன் கதையை நகர்த்தி இயக்குநர் பாரதிராஜாவுக்கு பிறகு கிராமத்து மண் வாசனையுடன் அனைவரும் ரசிக்கும்படமாக பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குநர் D D பாலச்சந்திரன் .
மொத்தத்தில் ‘லெனின் பாண்டியன்’ மனித நேயம் கொண்ட மாமனிதன் .
ரேட்டிங் - 3.5 / 5





Comments