top of page

‘டோரதி’ - விமர்சனம்

mediatalks001
15 hours ago
1 min read

1995 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறும் கதையாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்களாக பழகி வரும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவரும் எந்த பிரச்சனையானாலும் அடிதடியில் இறங்கி தைரியமான இளைஞர்களாக இருக்கின்றனர் .

.

இந்நிலையில் முத்துகுமாரின் மகனும் சனந்தின் அண்ணனான சௌந்தர்ராஜா மலையாள பெண்ணான கீர்த்தி சுரேஷை மனைவியாக வீட்டிற்க்கு அழைத்து வருகிறார் .


தன் அண்ணன் மனைவியான கீர்த்தி சுரேஷிடம் அன்புடன் பேசுவதும் அவருக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்து அவரிடம் பாசமாக சந்தோசமாக பழகுகிறார் சௌந்தர்ராஜா தம்பியான சனந்த்.


திடீரென ஒரு நாள் முத்துகுமாரும் ,சௌந்தர்ராஜாவும் கீர்த்தி சுரேஷை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க செய்து தற்கொலை செய்து கொண்டதை போல போலீசை நம்ப வைக்கின்றனர் .


கீர்த்தி சுரேஷின் மரணத்தால் மனமுடைந்து போகும் சனந்த் ஒரு கட்டத்தில் புடவை கட்டி கொண்டும் வளையல் போட்டு கொண்டு பொட்டுடன் குடும்பத்தினர் முன்னிலையில் திருநங்கையாக மாறி அனைவருக்கும் பயந்து வீட்டை விட்டு ஒடி விடுகிறார் .


சனந்த் திருநங்கையாக மாறியதால் தன் குடும்ப மானம் பறிபோகும் என்கிற பதட்டத்தில் சனந்தை கொன்று விட திட்டமிடும் முத்துகுமாரின் குடும்பத்தினர் ரிஷிகாந்த் முலம் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்கின்றனர் .


இறுதியில் முத்துகுமார் முடிவு செய்தபடி ரிஷிகாந்த் சனந்தை கொலை செய்தாரா ?

முடிவில் குடும்பத்தினர் வெறுத்த நண்பரான சனந்தை திரு நங்கையாக  ரிஷிகாந்த் ஏற்றுக் கொண்டாரா ? என்பதை சொல்லும் படம்தான் ‘டோரதி’


கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் தங்கள் கதாபாத்திரங்களில் ஒவ்வொரு காட்சிகளிலும் திறமையான நடிப்பில் இருவரும் போட்டி போட்டு கொண்டு உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .


டோரதி என்ற கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இயல்பான நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .


செளந்தராஜா , முத்துக்குமார் ,ராமச்சந்திரன் துரைராஜ், ஜீவா சுப்பிரமணியன், கஜராஜ் என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ள்ளனர் .


இசை ஞானி இளையராஜாவின் இசையும் , ஒளிப்பதிவாளர் எஸ்.திருவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் .


மதுரை மாவட்ட அடிதடி ரகளையான பின்னணியுடன் சாதி வெறி ,நட்பு , காதல் ,ஆக்ஷன் என அனைத்தும் கலந்த விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத ரசிகர்கள் யாரும் யூகிக்க முடியாத கதை அமைப்பில் பார்வையாளர்கள் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டிய சிறந்த படைப்பாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் .


மொத்தத்தில் ‘டோரதி’ அர்த்தநாரியின் அவதாரம்


ரேட்டிங் - 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page