top of page

'தி பாரடைஸ்’ - விமர்சனம்

mediatalks001
8 hours ago
1 min read

ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகும் சுதந்திர இந்தியாவில் அடக்கி ஆளும் அதிகார வம்சத்திற்கு அடிமையாக வாழ்ந்துக் கொண்டிருந்த சவாரி இன பழங்குடி சமூகத்தைச்சேர்ந்த மக்களை தன் கொடூரமான அடக்கு முறையால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மோகன் பாபுவும் அவரது மகனான ராகவ் ஜூயலும் சவாரி இன மக்களை கொத்தடிமைகளாகவும், சாராயம் காய்ச்சவும் தங்களின் சுயநலத்திற்கு அவர்களை பயன்படுத்துகின்றனர் .

ஒடுக்கப்பட்ட சவாரி இன மக்கள் சுதந்திரத்திற்குப் பிறகும் அடிப்படை குடியுரிமை, அடையாளச் சான்று மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு தங்கள் அடையாளத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அடக்குமுறை குணம் கொண்ட அதிகார வர்க்கம் அவர்களுக்கான அடையாளத்தை தடுத்து, அவர்களை தங்களுக்கு அடிமைகளாகவே வைத்திருக்க நினைக்கிறது.


அம் மக்களும் அவர்களுக்கான அடையாளத்திற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த சவாரி இனத்தில் பிறக்கும் நாயகன் நானி, தனது தாயை போல அடக்குமுறைக்கு எதிராக போராடி அடிமையாக இருக்கும் தன் இனத்தை மீட்டு அவர்களுக்கான நாட்டின் குடியுரிமையுடன் தன் மக்களுக்கான அடையாளத்தை பெற்று தர அதிகார வர்க்கத்தை எதிர்த்து களத்தில் இறங்கி போராடுகிறார் .


இறுதியில் தன் இன மக்களுக்கான போராட்டத்தில் நாயகன் நானி வெற்றி பெற்றாரா ? இல்லையா ?, என்பதை வன்முறையான ரத்த கறையுடன் சொல்லும் படம்தான் 'தி பாரடைஸ்’.


நாயகனாக சடையன் என்ற கதாபாத்திரத்தில் இரட்டை ஜடையுடன் நடித்திருக்கும் நானி அதிரடியான ஆக்ஷன் நடிப்பில் உடல் மொழியில் காதல் ,பாசம் ,வெறுப்பு ,செண்டிமெண்ட் என ஆக்ஷனுடன் சேர்ந்து கதைகேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர் கலக்கலான கவர்ச்சியுடன் அளவான நடிப்பில் இயல்பாக நடிக்கிறார் .


மிரட்டும் வில்லன்களாக நடித்திருக்கும் மோகன் பாபு மற்றும் ராகவ் ஜூயல் நானியின் அம்மாவாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்னி, நண்பராக நடித்திருக்கும் சம்பூர்னேஷ் பாபு, தணிகலபரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, ஈஸ்வரி ராவ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


அனிருத் இசையில் பாடல்களுடன் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் சி.எச்.சாயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


காலம் காலமாக தன் இன மக்களை காப்பாற்ற போராடும் நாயகனின் கதையை மையமாக வைத்து காட்சிகளில் பிரம்மாண்டம் இருந்தாலும் அழுத்தமில்லாத திரைக்கதை அமைப்பில் ரத்த களரியான வன்முறை காட்சிகளின் ஆதிக்கத்துடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடெலா


மொத்தத்தில், ‘தி பாரடைஸ்’ இரத்த போராட்டம்


ரேட்டிங் - 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page