'மீசைய முறுக்கு 2’ - விமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி கானா இசை மீது உள்ள புறக்கணிப்பை மீறி அதற்கான அங்கீகாரத்தைப் பெற்று கானா பாடல்களை மக்களும் ரசித்து கேட்பதற்கான முயற்சியை செய்கிறார் .
சங்கீத கர்னாடிக் இசைக்கலைஞர்கள் போல் பல்வேறு மேடைகளில் கானா பாடலை பாட வேண்டும் என்ற அவரது முயற்சி தோல்வியடைய, அவரது மகனும் அதே முயற்சியில் ஈடுபட்டு இசைத்துறையில் சாதிக்க நினைக்கிறார்.
கானா பாடல்கள் சபாக்களிலும் மேடைகளிலும் ஒலிக்க வேண்டும் என்ற கனவுடன் தொடங்கும் போராட்டம் அவரது வாழ்க்கை சூழ்நிலையால் அது நடக்காமல் போக, மூன்றாவது தலைமுறையிலும் அத்தகைய ஒரு போராட்டத்தை தொடங்குகிறார் ஹிப்ஹாப் ஆதி.
முதல் தலைமுறையில் நிறைவேறாத கனவுடன் இரண்டாம் தலைமுறையிலும் தொடர்ந்து போராடுபவர் மூன்றாம் தலைமுறையில் கானா இசைத்துறையில் சாதித்து வெற்றி பெற்றாரா ? என்பதை விறு விறுப்புடன் ஜனரஞ்சகமாக சொல்லும் படம்தான் ‘மீசைய முறுக்கு 2’.
நாயகனாக நடித்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி இளைமை துள்ளலுடன் ஆட்டம், பாட்டம் என்று படம் முழுவதிலும் கலகலப்பாகவும், கொண்டாட்டத்துடன் ,சென்னை கானாவுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தருவதற்கான போராட்டத்துடன் உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகிகளாக சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு நாயகி என மூன்று நாயகிகளும் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர்
ஆதியின் நண்பராக நடித்திருக்கும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன்,பாபா பாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் நடிப்பில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் , மூன்று காலக்கட்டங்களின் வேறுபாடுகளை நேர்த்தியாக கையாண்டு படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
கானா கலைஞர்களின் பாடலை அனைவரும் விரும்பும் பொதுவான பாடலாக உலகறிய செய்ய போராடும் நாயகனின் கதையை மையமாக வைத்து விறு விறுப்பான திரைக்கதையில் திரையரங்கில் ரசிகர்களை எழுந்து ஆட வைக்கும் பாடல்களோடு ரசிக்க வைக்கும் காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் ஜாலியான ஜனரஞ்சக படமாக எழுதி இயக்கி இசையமைத்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி
மொத்தத்தில், ‘மீசைய முறுக்கு 2’ கலக்கலான கானா கலாட்டா
ரேட்டிங் - 3 . 5 / 5





Comments