'கிட்டி' – விமர்சனம்

ரியா கிரியேஷன்ஸ் சார்பாக திருமாறன் தயாரிப்பில் கதை,திரைக்கதை ,வசனம் எழுதி நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கியுள்ள படம் 'கிட்டி'
அசோக் ,யுகன் , நிஷா ,சங்கவி ,சிமுஅத்வானி,அரவிந்த்ராஜ் , ஓய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .
'பணக்காரர் ஒருவரின் மகளான நிஷாவை தினமும் அவர் படிக்கும் கல்லூரியில் விட்டு கல்லூரி வகுப்பு முடிந்தவுடன் மீண்டும் அழைத்து வர நிஷா குடும்பத்தினர் ஆட்டோ டிரைவர் நாயகன் அசோக்கை நியமிக்கின்றனர் .
சில நாட்களில் அசோக்கும் நிஷாவும் காதலர்களாக காதலித்து கொண்டிருக்கின்றனர் . ஒரு கட்டத்தில் இருவரின் காதல் தோல்வியடைவதால் மனமுடைந்து இருக்கும் அசோக் ஒரு நாள் கடலூர் காவல் நிலையத்திற்குள் காவல் அதிகாரி யுகனிடம் தன் காதலி நிஷாவையும் தன்னை கொல்வதற்காக அவளது கோடீஸ்வரத் தந்தை அனுப்பிய கூலிப்படை தலைவனையும் தானே வெட்டிக் கெhன்றுவிட்டதாக இரண்டு கொலைகளைச் செய்த குற்றவாளியாக கத்தியுடன் இரத்தக் கறைகளுடன் போலீசில் சரணடைகிறார்.
அசோக் செய்த கொலைகளின் வழக்கை தீவிரமாக விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் யுகன் அசோக்குடன் ஒன்றாக தங்கியிருக்கும் அவரது நண்பனான ஆட்டோ டிரைவர் அர்ஜூனா துரைசாமியிடம் போலீசார் விசாரிக்கும்போது அசோகிற்கு மன நல பிரச்சனை இருப்பதையும் அவருக்கு டாக்டர் அரவிந்த்ராஜ் சிகிச்சை அளித்து வருவதையும் அவரது விசாரணை முலம் உறுதி செய்கின்றனர் .
மேலும் அசோக் கும்பகோணத்தில் வாழ்ந்தபோது ஒரு துணிக்கடையில் வேலை செய்த பெண்ணான சங்கவியை கொலை செய்ததாக சொல்லும் அசோக் அந்த வழக்கு விசாரணை நடைபெறும்போது கொலையான பெண் நீதிமன்றத்தில் உயிரோடு வந்து நின்று அசோக்கை தனக்கு யாரென்றே தெரியாது என்று கூறும்போது வழக்கு மேலும் தீவிரமடைகிறது.
இந்நிலையில் செய்யாத கொலைகளை அசோக் செய்ததாக சொல்லும் கொலைகளின் வழக்கை பற்றி அர்ஜூனா துரைசாமியிடம் மீண்டும் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கும்போது அசோக்கிடம் பழகிய டாக்டர் அரவிந்த்ராஜ் மகளான சிமுஅத்வானியை பற்றியும் இந்த கொலைகளின் பின்னணியில் உள்ள மர்மங்களையும் தெரிந்து கொண்ட காவல் அதிகாரி யுகன் உண்மையான குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து களத்தில் இறங்குகிறார் .
இறுதியில் அசோக் செய்ததாக சொல்லும் கொலைகளை செய்த உண்மையான குற்றவாளி யார் ? அசோக் கத்தியுடன் போலீசில் சரணடைவதற்கு காரணமான மர்ம நபர் யார் ? அர்ஜூனா துரைசாமியிடம் போலீசார் விசாரிப்பதற்கான காரணம் என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் படம்தான் ‘கிட்டி’
நாயகனாக அசோக் இயல்பான நடிப்பில் காதல் , நடனம் ,தவிப்பு ,உருக்கம் என ஆக்க்ஷனுடன் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
முக்கிய கதாபாத்திரத்தில் காவல் அதிகாரியாக கம்பீரமான தோற்றத்தில் நடிக்கும் யுகன் தேர்ந்த நடிகராக எதார்த்த நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .
முன்று நாயகிகளாக சங்கவி, நிஷா , சிமுஅத்வானி கதைகேற்றபடி அளவான நடிப்பில் ரசிகர்களை கவர்கின்றனர் .
அரவிந்த்ராஜ் , ஓய்.ஜி.மகேந்திரன் இவர்களுடன் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் காதரின் இசையும், ஒளிப்பதிவாளர் வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
மர்மம் நிறைந்த ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாக வைத்து ஆரம்பம் முதல் முடிவு வரை விறு விறுப்பான திரைக்கதையில் எதிர்பாராத திருப்பங்களுடன் காதல் , ஆக்ஷனுடன் சுவாரஸ்யமாக கதையை நகர்த்துவதுடன் அழுத்தமான கிரைம் த்ரில்லர் படமாக அனைவரும் ரசிக்கும் விதத்தில் கதை, திரைக்கதை ,வசனம், எழுதி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ்.
மொத்தத்தில் ‘ கிட்டி’ மர்மம் நிறைந்தவன்
ரேட்டிங் - 3 . 2 / 5





Comments