top of page

‘சிக்மா’ - விமர்சனம்

mediatalks001
11 hours ago
2 min read

மாபியா உலகில் தாதாவான சம்பத்ராஜ் கிரண் கொண்டாவிடம் தான் பதுக்கி வைத்த ரூ.1000 கோடி டாலர்பணம் இருக்கும் ரகசிய லாக்கரின் மண்டை ஓடு வடிவத்தில் பென் டிரைவ் போன்ற சாவியை உனக்கு வேண்டிய பணத்தை தேவைப்படும்போது என்னிடம் சொல்லி விட்டு எடுத்து கொள் என நம்பிக்கையுடன் அவரிடம் தருகிறார் .


இதேசமயம் ஷீலா ராஜ்குமாரின் மகனான சந்தீப் கிஷன் இறந்து போன தன் தந்தை வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் கடனாக வாங்கிய பணத்தினால் கடன் தொல்லையால் தவிக்கிறார் .


ஷீலா ராஜ்குமார் தொடங்கிய நூலகத்தை அவர் நினைவாக நடத்தி வரும் சந்தீப் கிஷன் யுடியுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் .


இந்நிலையில் சந்தீப் கிஷன் நாயகி ஃபரியா அப்துல்லாவை சந்திக்க இருவரது நட்பு நாளடைவில் காதலாக மாற இருவரும் காதலிக்கின்றனர் .

இச் சுழலில் கடன் கொடுத்தவர்களின் தொல்லை அதிகரிக்க கடனை அடைக்க தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து சூதாட்டம் ஆடி அதில் வரும் பணத்தை வைத்து கடனை அடைக்க நினைக்கிறார் .


அதே சமயம் சூதாட்ட விடுதி நடத்தும் ஷிவ் பண்டிடால் ஏமாற்றப்படும் சந்தீப் கிஷன் மொத்த பணத்தையும் இழக்கிறார் .


ஒரு கட்டத்தில் சந்தீப் கிஷன் வசிக்கும் இடத்திலேயே ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மண்டை ஓடு வடிவத்துடன் பென் டிரைவ் போன்ற சாவி கிடைக்கிறது .


கையில் கிடைத்துள்ள சாவியை பற்றி சந்தீப் கிஷனுக்கு எதுவும் தெரியாததால் பணத்திற்காக பென் டிரைவரில் உள்ள வீடியோவை வைத்து ஷிவ் பண்டிடீடம் பணம் பறிக்க முயற்சிக்கிறார் .


ஷிவ் பண்டிட்டும் சந்தீப் கிஷனிடம் இருக்கும் பென் டிரைவரை தன் அடியாளான யோக் ஜேபி முலம் அபகரிக்க முயலும் நேரத்தில் தாதாவான சம்பத்ராஜும் ரகசிய லாக்கரின் சாவியான பென் டிரைவரை தேடி அந்த இடத்தில் வருகிறார் .


இறுதியில் ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள ரகசிய லாக்கரின் சாவி யாருக்கு கிடைத்தது ? சந்தீப் கிஷன் ‘தனது முயற்சியில் வெற்றியடைந்து பண பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்தாரா ? இல்லையா ? என்பதை ஆக்க்ஷனுடன் சொல்லும் படம்தான் சிக்மா’.


நாயகனாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன் இளமை துள்ளும் நடிப்பில் காதல் ,பாசம் ,தவிப்பு ,ஏக்கம் என அழுத்தமான கதாபாத்திரத்தில் ஆக்‌ஷனுடன் சேர்ந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .


நாயகியாக நடித்திருக்கும் ஃபரியா அப்துல்லா கதைகேற்றபடி அளவான நடிப்பில் கவர்கிறார் .


வில்லன்களாக நடித்திருக்கும் ஷிவ் பண்டிட், சம்பத்ராஜ், ராஜு சுந்தரம் ,அன்பு தாசன், யோக் ஜேபி, ஷீலா ராஜ்குமார், மகாலட்சுமி சுதர்சனன், கமலேஷ் ஜெகன், கிரண் கொண்டா, நாகசாய் என நடித்த நடிகர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் ..


இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையும் ,ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


பல கோடி பணம் இருக்கும் ரகசிய லாக்கரின் சாவியை மையமாக கொண்ட கதையுடன் விறு விறுப்பான திரைக்கதையில் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து அம்சங்களுடன் சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி நகைச் சுவையுடன் கலகலப்பாக அனைவரும் ரசிக்கும் விதத்தில் ஆக்க்ஷன் திரில்லர் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.



மொத்தத்தில், ‘சிக்மா’ ஜனரஞ்சகமான படைப்பு .


ரேட்டிங் - 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page