‘பத்தா’ - விமர்சனம்

ஸ்டார் ஸ்டுடியோ18 ,ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் சார்பாக முராத் கெதானி , பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே தயாரிப்பில் விஜய் சேதுபதி நாயகனாக இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள படம் 'பத்தா'
1986 ஆம் ஆண்டு கால கட்டத்தில் வட சென்னையில் தொடங்கும் கதையாக காலடிப் பேட்டை பகுதியில் மனைவி லிஜோமோல் ஜோஸ் மற்றும் மகள் சஹஸ்ராவுடன் வாழ்ந்து வரும் நாயகன் விஜய் சேதுபதி ஏரியாவில் மிக பெரிய ரவுடியாக ஏரியா மக்கள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவரும் பயப்படும்படி எதிரிகளைத் தூக்கிப் போட்டு மிதிப்பதும், சாராயம் விற்பதும் என சட்ட வி ரோதமாக பல குற்ற செயல்களை செய்து கெத்தாக வாழ்கிறார் .
ஒரு நாள் பட்டப் பகலில் அர்ஜுன் சிதம்பரத்தை விஜய் சேதுபதி பயங்கரமாக அடிப்பதை பார்க்கும் சிறுவனான சாய் பிரித்வி ராஜ் சக மாணவர்களுடன் பேசும்போது விஜய் சேதுபதியை அலற வைக்கும் ரவுடியாக நினைத்து பயப்படுகிறான் .
ஒரு கட்டத்தில் பள்ளியில் நடைபெறும் ஆண்டு தேர்வின்போது தேர்வு எழுதாமல் தான் வாங்கிய பொம்மையை மாணவன் சாய் பிரித்வி ராஜ் விளையாடும் நேரத்தில் வகுப்பு ஆசிரியை அதனை பிடுங்கி அலுவலக பீரோவுக்குள் வைத்து விடுகிறார்.
இதே ஞாபகத்தில் இருக்கும் சாய் பிரித்வி ராஜ் பள்ளி கோடை விடுமுறையில் தனக்குச் சொந்தமான விளையாட்டு பொம்மையை எடுப்பதற்காக யாருக்கும் தெரியாமல் பூட்டியிருக்கும் பள்ளிக்குச் செல்லும் சாய் பிரித்வி ராஜ் பொம்மையை எடுத்து விட்டு கழிவறைக்கு சென்று திரும்பியவுடன்
ஏற்கனவே அந்த கழிவறையில் விஜய் சேதுபதி இருப்பது தெரியாமல் வெளியிலிருந்து பூட்டிவிட, மீண்டும் கதவைத் திறக்கச் செல்லும்போது விஜய் சேதுபதி மிரட்டலுக்கு பயந்து அங்கிருந்து தப்பித்து செல்கிறான்.
கழிவறையில் சிக்கி கொள்ளும் விஜய் சேதுபதி வெளிப்பக்கம் கதவு
பூட்டப்பட்டதால் நகரின் மிகப்பெரிய ரவுடியாக இருந்தும் ஆயுதங்களோ ஆட்களோ அதிகாரமோ இன்றி அந்தச் சிறிய கழிவறைக்குள் அடைபட்டு தவிக்கும் நிலையில் தனக்கு அங்கு கிடைத்த பொருட்களை வைத்து வெளியே வர போராடி கொண்டிருக்கிறார் .
விஜய் சேதுபதி கழிவறையில் மாட்டி கொண்டதை தெரிந்து கொண்ட சிறுவன் சாய் பிரித்வி ராஜ் அவரை வெளியே வரவிடாமல் இரக்க குணத்துடன் காலையில் மட்டும் சாப்பிட பொறை பதற்றத்தோடு உள்ளிருந்து விஜய் சேதுபதி பல முறை கெஞ்சி பார்த்தும் கதவை திறக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறான். ஆனால் அதே வேளையில், சிறுவன் மனதில் இருக்கும் இயல்பான இரக்க குணத்தால் நாட்கள் செல்ல செல்ல கழிவறைக்குள் அடைபட்டு எந்த வித தொடர்பும் இல்லாமல் தன் சுதந்திரத்தை இழந்த விஜய் சேதுபதி குடும்ப வாழ்க்கையின் மதிப்புடன் தன் மனைவி மகளை நினைத்து மனமுடைந்து கலங்குகிறார் .
இறுதியில் சிறுவன் சாய் பிரித்வி ராஜ் கழிவறையின் கதவை திறந்தால் மட்டுமே வெளியே வர முடியும் என்கிற நிலையில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்றியது யார் ? அவரது நிலை என்ன ? கழிவறையின் வெளியே வந்த விஜய் சேதுபதி கதவை பூட்டி தன்னை கதற வைத்த சிறுவன் சாய் பிரித்வி ராஜை என்ன செய்தார் ? என்பதுதான் பர பரப்பான ‘பத்தா’ படத்தின் மீதி கதை
நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி ரவுடியாக முரட்டுத்தனமான தோற்றத்தில மிக சிறப்பாக உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் போது உடல் மொழியால் தனக்குள் ஏற்படும் பதட்டம் ,பயம் , தவிப்பு என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சபரி என்ற பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் சாய் பிரித்வி ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு இணையாக நடிப்பில் மிக இயல்பான நடிப்பில் பார்வையாளர்கள் மத்தியில் நடிப்பில் பாராட்டை பெறுகிறான்
விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக சிறப்பாக நடிக்கிறார் .
சஹஸ்ரா, அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், சாண்டி பாலச்சந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் நடிப்பில் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையும் ,ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.எஸ்.கே ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஊரே நடுங்கும் ரவுடி ஒரு சிறுவனால் இக்கட்டான நிலையில் கழிவறையில் மாட்டிகொண்டு அவதிப்படுவதை மையமாக கொண்ட கதையுடன் குடும்பத்தின் அருமை தெரியாமல் ஆணவத்தில் ஆடும் மனிதர்களின் நிலை திடீரென தடம் மாறினால் அவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவர்களது பயம் கலந்த பதட்டமான சூழ்நிலையை விறு விறுப்பான திரைக்கதையில் ஆரம்பம் முதல் முடிவு வரை பர பரப்புடன் சிறப்பான கதையை நகர்த்தி சுவாரஸ்யமான காட்சிகளுடன் இயக்குநராக மீண்டும் தன் திறமையை நிருபித்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.
மொத்தத்தில், ‘பத்தா’ குடும்ப ரசிகர்களுக்கான பரபரப்பான படம்.
ரேட்டிங் - 4 / 5





Comments