‘அன்பில் அவன்’ - விமர்சனம்

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பாக கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் தயாரிப்பில் இயக்குநர்ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள படம் 'அன்பில் அவன்'
நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் தம்பதியினர் திருமணத்திற்குப் பின் பொருளாதார சிக்கல் இல்லாமல் ஒரு நிலையான வாழ்க்கையை வாழ இருவரும் கடுமையாகப் போராடுகிறார்கள்.
பிரீத்தி முகுந்தன் படிக்கும் காலத்தில் இருந்தே, சொந்தமாக தங்கும் விடுதியான விருந்தோம்பல் இல்லம் ஒன்றை தொடங்குவதை கனவாக கொண்டிருக்கிறார்.
தன் காதல் மனைவியின் கனவை நினைவாக்க தங்கும் விடுதியான விருந்தோம்பல் இல்லம் ஒன்றை ஆரம்பிக்க அசோக் செல்வன் முடிவு செய்கிறார்.
இந்நிலையில் மலை கிராமத்தில் உள்ள வீட்டை ஒன்றை வாங்கி, அதை விருந்தோம்பல் விடுதியைத் தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் செய்கின்றனர் .
பல ஆண்டுகளாக அந்த வீட்டை விற்க மறுத்து வந்த ரேவதி இளம் தம்பதிகளுக்காக வீட்டை விற்றாலும், அந்த இடத்தை அடையத் துடிக்கும் எம்.எல்.ஏ. கதிர் பாலு ,வழக்கறிஞர் சாபுமோன் அப்துசமத், இன்ஸ்பெக்டர் மஹா டெல்லி கணேஷ் ஆகியோர்களால் அரசு அனுமதியுடன் உரிமம் பெற்று விடுதியைத் தொடங்குவதற்கு அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தனுக்கு சிக்கலான பிரச்சனை ஏற்படுகிறது .
இறுதியில் எதிரிகளின் தடைகளை கடந்து பிரீத்தி முகுந்தனின் கனவான விருந்தோம்பல் தங்கும் விடுதியை அசோக் செல்வன் தொடங்கினாரா ? இல்லையா? என்பதை காதலுடன் ஆக்க்ஷன் த்ரில்லராக சொல்லும் படம்தான் ‘அன்பில் அவன் ‘
நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன் கல்லூரிப் பருவத்தில் காதலனாக, இயல்பான வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழும் அன்புள்ள காதல் கணவனாக ,மனைவியின் கனவை நினைவாக்கும் முயற்சியில் ஏற்படும் சிக்கலான பிரச்சனை, உருக்கம் ,தவிப்பு , ஆக்க்ஷன் என அனைத்திலும் உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
நாயகியாக பிரீத்தி முகுந்தன் கதையுடன் இணைந்து இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் பாலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹா டெல்லி கணேஷ், வழக்கறிஞராக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசமத், ராணி பத்மினியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ரேவதி ஆகியோருடன் படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
கோவிந்த் வசந்தாவின் இசையும் ,ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
இயல்பான காதலுடன் ஆக்க்ஷனை மையமாக கொண்ட கதையுடன் இளம் தம்பதியின் காதலை அழகாக சொல்வதோடு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையான போராட்டங்களை ஆக்ஷன் காட்சிகளோடு கதையை கையாண்டு அழுத்தமில்லாத பலவீனமான திரைக்கதையில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர்ஆர்.கார்த்திகேயன்.
ரேட்டிங் - 2. 5 / 5
மொத்தத்தில், ‘அன்பில் அவன்’ பலவீனமானவன்





Comments