‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ - விமர்சனம்

எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ஆர்கா மீடியா வொர்க்ஸ், ஷோயிங் பிசினஸ் நிறுவனத்தின் சார்பாக ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ். எஸ். கார்த்திகேயா தயாரிப்பில் ஃபஹத் பாசில் நாயகனாக இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி இயக்கியுள்ள படம் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’
ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டும் டிரைவரான ஃபஹத் பாசில், வாழ்க்கைக்கு பணம் மிக முக்கியம் என்பதால், பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் உள்ளூர் தாதாவான மகேஷ் மஞ்ச்ரேகரை ஏமாற்றியதால், இரண்டு நாட்களுக்குள் ரூ.25 லட்சத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழலில் சிக்கிக் கொள்கிறார்
இதற்கிடையே தனது பணத் தேவைக்காக இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஃபஹத் பாசில், இறந்து ஆன்மாவாக சுற்றி வரும் சிறுமி சாரா பாலேகரை கடத்துகிறார்.
ஆன்மாவாக தான் இறந்தது தெரியாமல் இருக்கும் சாரா பாலேகர் தொலைந்த தன் பெற்றோரை கண்டுபிடிக்க ஃபஹத் பாசிலிடம் உதவி கேட்கிறார்.
இந்நிலையில் தான் கடத்தியிருப்பது சிறுமியின் இறந்த ஆன்மா என்பது தெரியாமல், அவருடன் பயணிக்கும் ஃபஹத் பாசில், கண்ணுக்கு மட்டும் சாரா பாலேகரின் ஆன்மா தெரிகிறார் .
ஒரு கட்டத்தில் சாரா பாலேகர் ஓர் இறந்த ஆத்மா என்பதை ஃபஹத் பாசில் தெரிந்து கொள்ளும் நேரத்தில் சிறுமியை கடத்திய குற்றவாளியாக போலீசாரால் ஃபஹத் பாசில் கைது செய்யப்படுகிறார் .
சிறுமி சாரா பாலேகரின் பெற்றோர் என்ன ஆனார்கள் ?, சாரா பாலேகர் இறந்தது எப்படி ? சாரா பாலேகரின் பெற்றோரை ஃபஹத் பாசில் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கான பதில் தான் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஃபஹத் பாசில் கதாபா த்திரத்துடன் இணைந்து வழக்கம் போல் தனது அசாத்தியமான நடிப்பின் திறமையில் உணர்வுப்பூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
திவ்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி சாரா பாலேகர், குழந்தைகள் உலகத்தை தன் இயல்பான நடிப்பின் மூலம் மேஜிக் மீது அதீத ஆர்வம் கொண்டு தான் ஒரு ஆத்மா என்பதை உணராமல், மாயாஜாலம் செய்யும் சிறுமியாக குழந்தைத்தனத்துடன் சிறப்பாக நடித்துள்ளார் .
மகேஷ் மஞ்ச்ரேகர், செளரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு, கிருஷ்ணா, திவ்யாவின் அம்மாவாக பல்லவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா பிள்ளை, சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.எஸ்.ஷஷாங்க் ஆகியோர் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக உள்ளனர் .
கால பைரவாவின் இசையும் , பிராட் பிரான்சிஸின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடு தல் பலம் .
இளைஞனுடன் இறந்து போன ஆத்மாவான சிறுமி சேர்ந்து பயணிக்கும் ஃபேண்டஸியான உணர்வுப்பூர்வ கதையை மையமாக வைத்து குழந்தைகள் ரசிக்கும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் கற்பனையான மேஜிக் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என படத்தை கலகலப்பாக நகர்த்தி விறு விறுப்பான திரைக்கதையில் சாரா பாலேகரின் நடிப்புடன் அவரது ‘ஸ்னூபி’ நாய் குட்டியின் காட்சிகள் மூலம் குழந்தைகளைக் கவர்ந்து குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் விதமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி.
மொத்தத்தில், ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ சிறுவர்களுக்கு கொண்டாட்டம்
ரேட்டிங் - 3 . 2 / 5





Comments