top of page

‘ஏழு கடல் ஏழு மலை’ - விமர்சனம்

mediatalks001
8 hours ago
2 min read

தொடக்கத்தில் ஒலி அமைப்பில் ஒரு சிறுவனிடம் ஒரு பெண்மணி சொல்லும் கதையாக....


துபாயில் பணிபுரியும் சூரி தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாட்டில் சொந்த ஊருக்கு ரயிலில் பயணிக்கும்போது 8,000 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாகாவரம் பெற்ற இறப்பு என்பதே இல்லாத ஒரு மனிதராக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிவின் பாலியை சந்திக்கிறார் .

அபூர்வ மனிதனாக 8 ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்தாலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன் காதலியை தேடும் பயணத்தை நிவின் பாலி தொடர்கிறார்.


இருவரது பயணத்தில் நிவின் பாலி ஆழமாகக் காதலித்த பெண்ணான அஞ்சலியை மீண்டும் தேடுவதும் இவர்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் ஒரு எலியின் முலம் உருவாகும் சில சம்பவங்களும், மனிதர்களின் சுயநலமும், பிற உயிர்களிடம் காட்ட வேண்டிய கருணையுடன் ஒடும் ரயிலில் ஒரே பெட்டியில் நிவின் பாலிக்கும் சூரிக்கும் பயணத்தில் நடக்கும் விபரீத சம்பவங்கள், அதன் பின் ஒரு தாய் எலியின் உயிர் வாழ்வதற்கான போராட்டமும் கலந்து 8,000 ஆண்டுகள் வாழும் அந்த மனிதனின் தெய்வீக காதலும், அவனது கடந்த கால நினைவுகளுடன் இருவருக்குமான சந்திப்பில் காதல் என்ற பேரன்பு பற்றியும், உலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் ஒன்று தான், என்ற கருத்துடன் கனவுலகத்துடன் இயற்கையின் பின்னணியோடு உருவாக்கப்பட்ட படம்தான் ‘ஏழு கடல் ஏழு மலை’.


8,000 ஆண்டுகளுக்கும் மேல் வாழும் இறப்பு இல்லாத மனிதராக நீண்ட முடியுடன் நடித்திருக்கும் நிவின் பாலி, அனைத்து காலக்கட்டங்களில் தான் சந்தித்த காதலை பற்றி சொல்லி உருகும்போதும் ரயிலில் சூரி மற்றும் ஒரு எலியுடன் உரையாடும் காட்சிகளில் மிகவும் இயல்பான உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்தி, தனது அர்ப்பணிப்பான நடிப்பின் மூலம் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.


நிவின் பாலியிடம் சிக்கிக்கொண்டு போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரிஇயல்பான மனிதனாக தன் நடிப்பால் நேர்த்தியாக பிரதிபலித்திருப்பதோடு, பயம், பதட்டத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .

முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ரசிகர்களை கவர்கிறார் .


என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ரயில் பயணத்தையும், நிவின் பாலி சொல்லும் கதையில் கனவான உலகத்தை காட்சிகளின் முலம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்.


யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மெருகேற்றியிருக்கிறது.

காலத்தை கடந்த காதல் மற்றும் உயிர்களிடத்துச் செலுத்த வேண்டிய கருணையை மையமாகக் கொண்ட கதையுடன் புதிய முயற்சியாக கனவு உலகத்தை காட்சி மொழியில் திரையில் கொண்டு வந்து கற்பனை உலகில் வாழ்பவர்களுக்கு எத்தனை ஜென்மங்களாயினும் காதலியை தேடும் கனவுலகில் இயற்கையோடு பயணிக்கும் காட்சிகளுடன் கருணையுடன் கொண்ட பேரன்பான காதலை மனிதநேயத்தையும் வித்தியாசமான திரைக்கதையில் அழுத்தமாக சொல்வதுடன் புதுமையான காவியமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம் .


மொத்தத்தில், ‘ஏழு கடல் ஏழு மலை’ புதிய உலகம்


ரேட்டிங் 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page