top of page

‘ E 1 ’ - விமர்சனம்

mediatalks001
5 hours ago
1 min read

Couple Creations சார்பில் சதா நாடார், மோனிகா செலினா தயாரிப்பில் கதை,திரைக்கதை ,வசனம் எழுதி சதாநாடார்.

இயக்கியுள்ள திரைப்படம் ‘ E 1 ’


ஒரு நாள் இரவு நேரத்தில் நாயகன் சதாநாடாரும், அவரது நண்பர் பாண்டியும் ஒரு அபார்மெண்ட்டில் முதல் மாடியில் குடியிருக்கும் சுந்தரத்தை கொலை செய்வதற்கான திட்டம் போடுகின்றனர் .


நண்பர் பாண்டி காரில் இருக்க நாயகன் சதாநாடார் முகமுடி அணிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் அபார்மெண்ட்டில் நுழைந்து சுந்தரத்தை கொலை செய்து கைக்குழந்தையுடன் தனியாக இருக்கும் நாயகி மோனிகா செலினா வீட்டிற்குள் அவருக்கே தெரியாமல் ஒரு சாக்கு பைக்குள் பிணத்தை மறைத்து அதனுடன் அவரது வீட்டில் இருக்கிறார் .


இந்நிலையில் கணவர் வெளியூருக்கு சென்ற நிலையில் சதாநாடாரையும் தன் வீட்டில் மறைத்து வைத்துள்ள பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கொலையான சுந்தரத்தை பார்த்து அதிர்ச்சியடையும் நாயகி மோனிகா செலினாவை மிரட்டி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் சதாநாடார்.

ஒரு கட்டத்தில் அபார்மெண்ட் செக்யூரிட்டி முதல் அடுத்த வீட்டில் வசிக்கும் பெண் வரை சந்தேகத்தின் பேரில் மோனிகா செலினாவை விசாரிக்க கொலையான நபருடன் சதாநாடார் வீட்டின் உள்ளே இருப்பதை உயிருக்கு பயந்து அனைவரிடத்திலும் மறைக்கிறார் மோனிகா செலினா.



இறுதியில் சதாநாடார் என்ன காரணத்திற்காக சுந்தரத்தை கொலை செய்தார் ? சதாநாடாரின் கொலை மிரட்டலில் இருந்து மோனிகா செலினா தப்பித்தாரா ? முடிவில் பிணத்துடன் மோனிகா செலினா வீட்டிலிருந்து வெளியில் சென்றது எப்படி ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் ‘E 1’


நாயகனாக தயாரித்து , இயக்கி நடித்திருக்கும் சதாநாடார் ஆரம்பத்தில் மிரட்டலான நடிப்பதுடன் தனக்கு நேர்ந்ததை சொல்லும் காட்சிகளில் பாசம் ,தவிப்பு ,உருக்கம் என உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


நாயகியாக நடித்திருக்கும் மோனிகா செலினா கதையுடன் இணைந்து உடல் மொழியில் பதட்டம் கலந்த பயத்தை உணர்வுகளால் வெளிப்படுத்தி குழந்தை-பேபிஷிவ்வுடன் இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .


வில்லனாக நடிக்கும் சுந்தரம் ,நண்பராக நடிக்கும் பாண்டி மற்றும் படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


இ.ஜே.ஜான்சன் இசையும் , ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.மனோகுமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


ஒரு நாள் இரவு நேரத்தில் அபார்மெண்ட்டில் க்ரைமுடன் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மையமாக வைத்து விறு விறுப்பான நேர்த்தியான திரைக்கதையில் பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கு எதிராக பெற்றோர்களுக்குஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்கும்படி திரைப்படத்தை கதை,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சதாநாடார்.


மொத்தத்தில் ‘E 1’ பாலியல் துன்புறுத்தலுக்கு சரியான தீர்வு


ரேட்டிங் - 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page