‘தாய் நிலம்’ - விமர்சனம்

நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தாய் நிலம்’
2008 ஆம் ஆண்டில் காலகட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற தமிழ் ஈழத்துப் போரில் மனைவியை இழந்து உறவுகளுடன் சொந்த மண்ணை விட்டு ராமேஸ்வரத்துக்கு டாக்டர் அமர் ராமச்சந்திரனும் அவரது சிறு வயது மகளான நேகா அமரும் வருகின்றனர் .
ராமேஸ்வரம் போலீசார் அனுமதியுடன் டாக்டர் அமர் ராமச்சந்திரன் இலங்கை அகதிகள் முகாமுக்கு செல்லாமல் போலீசாரின் அனுமதி பெற்று தனது மனைவியின் உறவுகளை சந்திக்கும்போது அவர்கள் இருவரையும் அவமானப்படுத்துவதால் தென்காசியில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் பாலா சிங் மனித நேயத்துடன் டாக்டர் அமர் ராமச்சந்திரனை மகளுடன் அந்த இடத்தில் தங்குவதற்கான ஏற்பாட்டை செய்து தருகிறார் .
சில நாட்கள் கடந்த பின் பாலா சிங் டாக்டர் அமர் ராமச்சந்திரன் சொந்தமாக தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பதற்கான வழியையும் ஏற்படுத்தி தருகிறார் .
அதே சமயம் ஒரு பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்து டாக்டர் அமர் ராமச்சந்திரனின் மகள் நேகா அமர் மீண்டும் பள்ளியில் படிப்பதற்கு சிபாரிசு செய்கிறார் .
இந்நிலையில் போரில் தமிழ் ஈழ மக்களின் அவலங்களை நேரில் பார்த்த மன கலக்கத்துடன் மனைவியை இழந்த வேதனையும், மகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு தன் மகளுக்காக பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியாத மன வலியுடன் ஒரு இரவில் மகள் நேகா அமருடன் தள்ளு வண்டியில் உறங்குகிறார் டாக்டர் அமர் ராமச்சந்திரன்.
அதன் பின் விடிந்தவுடன் நடக்கும் எதிர்பாராத அதிர்ச்சி தரும் சம்பவத்துடன் மனதை கலங்க வைக்கும் படம்தான் ‘தாய் நிலம்’
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டாக்டர் அமர் ராமச்சந்திரன் மற்றும் நேகா அமர் இருவரும் இலங்கை தமிழ் இன அகதிகளாக காட்சிகள் அனைத்திலும் உணர்வுபூர்வமாக மனதை கலங்க வைக்கும் நடிப்பில் பாராட்டும்படி அந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர் .
நல்ல குணமுள்ள இயல்பான மனிதராக நடித்திருக்கும் பாலாசிங் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .
தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் சொக்கம்பட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவும் , இசையமைப்பாளர் ஔசேப்பச்சன் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் .
இலங்கையில் நடைபெற்ற போரில் மனைவியுடன் சொந்த மண்ணையும் இழந்து பிழைக்க வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறிய வயது மகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையுடன் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் நல்ல மனிதர்களின் அன்பு , தந்தை – மகள் உறவு , உதவி செய்யும் பண்பு ஆகியவற்றுடன் கதையோடு பயணிக்கும் இலங்கை மக்களின் வலியை ஆழமாக சொல்வதுடன் ஈவு இரக்கமற்ற மனிதர்களால் உலக நாடுகளில் நடைபெறும் போரின் காரணத்தால் அனாதையான ஒரு சிறுமியின் கதையாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் .
மொத்தத்தில் ‘தாய் நிலம்’ தமிழ் ஈழ மக்களின் வலி
ரேட்டிங் - 3 . 5 / 5





Comments