top of page

'ட்ரோன்ஸ்' - விமர்சனம்

mediatalks001
13 hours ago
2 min read

ஜி எம் மோர்கன் பிலிம்ஸ் ஜி எம் மோர்கன் தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “ட்ரோன்ஸ்”


டிராவிட் செல்வம், சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, சினிமா வாலா சதீஷ், குரேஷி, ஆர் ஜே தீபக், சசி செல்வராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் .


நண்பர்களான நாயகன் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே.தீபக் ஆகியோர் படித்து கொண்டிருக்கும் கல்லூரியில் சஸ்பெண்ட் செய்யப்படுவதால் பெற்றோர்களுக்கு பயந்து வெளியே தங்க முடிவு செய்யும் இவர்கள் மூவரும் பிளாக் ஹோல் என்று சொல்லக்கூடிய குரேஷியின் அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் தங்குகிறார்கள்.


இந்நிலையில் குரேஷியின் அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இவர்களால் அந்த இடத்தில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலைமை உருவாகிறது.


ஒரு கட்டத்தில் பறக்கும் தட்டை போல இருக்கும் ட்ரோன் கேமராவை டிராவிட் செல்வம் இயக்கும்போது அருகில் உள்ள ஒரு பங்களாவில் சூனியக்காரக் கிழவி தேவதர்ஷினி கட்டுப்பாட்டில் இருக்கும் அழகிய இளம் பெண்ணான சித்தி இத்னானி இருப்பதை பார்த்து அவரது அழகில் மயங்கி அவரை காதலிக்கிறார் டிராவிட் செல்வம்.


இதற்கிடையில் நகரில் மாய மந்திரம் ,கைரேகை ,ஜோசியம் பார்க்கும் நபர்களை சைக்கோத்தனமான மர்ம நபரால் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றனர் .


மற்றொரு பக்கம் காவல் அதிகாரியான சினிமாவாலா சதீஷ் இந்த மர்ம கொலைகளின் வழக்கின் தீவிர விசாரணையில் இறங்குகிறார் .


இக் சுழலில் காதல் மயக்கத்தில் வாழும் டிராவிட் செல்வம் அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து சாமர்த்தியமாக வெளியே வந்து மாய பங்களாவில் வாழும் காதலி சித்தி இத்னானியிடம் தன் காதலை வெளிப்படுத்தும்போது இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சித்தி இத்னானியின் சூனியக்காரி பாட்டியான வயதான தேவதர்ஷினி டிராவிட் செல்வத்தை ஒரு மாய அறையில் அடைத்து வைக்கிறார் .


இந்நேரத்தில் மாயமான டிராவிட் செல்வத்தை தேடி ஆர்.ஜே.தீபக் மாய பங்களாவுக்குள் நுழைய அவரும் சூனியக்காரி கிழவியான தேவதர்ஷினியால் டிராவிட் செல்வம் இருக்கும் மாய அறைக்குள் சிக்கி கொள்கிறார் .


டிராவிட் செல்வத்தை தேடும் அஞ்சலி நாயருடன் சேர்ந்து காவல்துறை அதிகாரியான சினிமாவாலா சதிஷும், சித்தி இத்னானியின் அழகில் மயங்கும் விஞ்ஞானியான குரேஷியும் அந்த மாய பங்களாவுக்குள் தேவதர்ஷினியால் வெவ்வேறு மாய இடங்களில் சிக்கி கொள்கின்றனர் .


இறுதியில் சூனியக்காரியான தேவதர்ஷினி நாயகி சித்தி இத்னானியின் பாட்டிதானா ? நாயகி சித்தி இத்னானியின் அழகில் மறைந்திருக்கும் மர்ம பின்னணி கொண்ட சோகம் என்ன ? மாய பங்களாவுக்குள் சிக்கிக் கொண்ட அனைவரும் தப்பித்தது எப்படி ? என்கிற கேள்விகளுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள மாயாஜாலத்துடன் நகைச்சுவையோடு சொல்லும் படம்தான் ‘ட்ரோன்ஸ்’.


கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி வெள்ளை உடையில் அழகில் தேவதையாக காதல் ,உருக்கம் , ஏமாற்றம் , தவிப்பு என அனைத்து உணர்வுகளை உள்வாங்கி உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


நாயகனாக நடித்திருக்கும் டிராவிட் செல்வம் சித்தி இத்னானியின் அழகில் மயங்கும் காதலனாகவும் , காதலியின் நிலை தெரிந்து கதறும் காட்சிகளிலும் , இயல்பான நண்பர்களிடம் பழகும் காட்சிகளிலும் நாயகனாக காமெடியுடன் தன் கதாபாத்திரத்தை சிறப்பான நடிப்பில் திறமையாக பாராட்டும்படி நடித்துள்ளார் .


வயதான சூனியக்காரியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி புதுமையான கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக அனுபவ நடிப்பில் ஒவ்வொரு காட்சிகளிலும் அவரது கடின உழைப்பு தெரிகிறது .


காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் சினிமாவாலா சதீஷ், குரேஷி ஆர்.ஜே.தீபக் , சசி செல்வராஜ் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவும் ,இசையமைப்பாளர் ஹரி.எஸ்.ஆர்-ன் இசையும் படத்திற்கு பக்க பலம் .


மாயாஜாலத்துடன் மிரட்டலான ரசிக்க வைக்கும் பாட்டி கதையுடன் இன்றைய காலத்தில் பறக்கும் தட்டு என்ற கற்பனையில் ட்ரோன் கேமராவையும் இணைத்து அழகான தேவதை , சூனியக்கார கிழவி அறிவியல் ஆராய்ச்சியாக பெண் ரோபாட், காதல் ,நட்பு ,சோகம் என அனைத்தும் கலந்த விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் குழந்தைகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடக்கூடிய கலகலப்பான ரசிக்க வைக்கும் காமெடி பின்னணியுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத்


மொத்தத்தில், ‘ட்ரோன்ஸ்’ - குழந்தைகளுடன் குடும்பத்தினர் கொண்டாடும் மாயாஜால காமிக்ஸ்


ரேட்டிங் - 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page